உங்க ஈகோவால இந்தியாவ தோற்கடிச்சுடாதீங்க.. ஸ்ரேயாஸ் ஐயரை விமர்சித்த கம்பீர்.. முக்கிய அட்வைஸ்

Gautam Gambhir 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 6 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று செமி ஃபைனல் வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது. குறிப்பாக இதுவரை நடைபெற்ற போட்டிகளில் வலுவான ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற வலுவான அணிகளை தோற்கடித்துள்ள இந்திய அணியில் அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர்.

அதன் காரணமாக 2011 போல இம்முறையும் இந்தியா சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்திய அணியின் தற்போதைய பேட்டிங் வரிசையில் ரோகித் சர்மா, கில், விராட் கோலி, ராகுல் ஆகிய அனைவரும் நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் தடுமாற்றமாக விளையாடுவது பின்னடைவை ஏற்படுத்துவதாக இருந்து வருகிறது.

- Advertisement -

குறிப்பாக சுழல் பந்து வீச்சாளர்களை மிகச் சிறப்பாக எதிர்கொள்ளும் அவர் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் ஷார்ட் பிட்ச் பவுன்சர் பந்துகளில் கேட்ச் கொடுத்து அவுட்டாகும் பலவீனத்தைக் கொண்டுள்ளார் என்பதை அனைவருமே அறிவார்கள். ஆனாலும் காயத்திலிருந்து குணமடைந்த பின் அதில் எவ்விதமான முன்னேற்றத்தையும் காணாத அவர் நியூசிலாந்துக்கு எதிரான கடந்த போட்டியில் ட்ரெண்ட் போல்ட் வேகத்தில் 33 ரன்களில் அவுட்டான நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக கிறிஸ் ஓக்ஸ் ஷார்ட் பிட்ச் பந்தில் 4 ரன்களில் நடையை கட்டினார்.

இந்நிலையில் நீங்கள் ஷார்ட் பிட்ச் பந்துகளில் அவுட்டாவீர்கள் என்பதை தெரிந்து பந்து வீசும் எதிரணி பவுலர்களுக்கு முன்னேறிவிட்டேன் என்பதை காட்டுவதற்காக வேண்டுமென்றே ஈகோவுடன் ஃபுல் ஷாட் அடித்து இந்தியாவின் வெற்றிகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தாதீர்கள் என்று ஸ்ரேயாஸ் ஐயரை முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“வலைப்பயிற்சியில் நீங்கள் பயிற்சிகளை எடுக்கிறீர்கள் என்பதற்காக முதன்மையான போட்டியில் அந்த ஷாட்டை அடிக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் அவர் அதை அடித்தாக வேண்டுமென்ற எண்ணத்துடன் விளையாடுவது தெரிகிறது. சொல்லப்போனால் அவர் முன்னோக்கி சென்று புல் ஷாட்டை அடிப்பதற்கு பதிலாக ஷார்ட் பந்துகளுக்கு காத்திருந்து விளையாடுகிறார். இந்தப் போட்டியில் அவர் அனைத்து பந்துகளிலும் ஃபுல் ஷாட் அடிக்க முயன்றதை பார்த்தீர்கள்”

இதையும் படிங்க: இந்தியாவுடன் ஃபைனலில் மோதி ஜெயிக்கப்போவது அவங்க தான்.. நேதன் லயன் கணிப்பு

“ஆனால் தரமான சர்வதேச பவுலர்களுக்கு எதிராக உங்களால் அதை அடிக்கடி செய்ய முடியாது. உங்களால் கட்டுப்படுத்தக்கூடிய பந்துகளில் மட்டுமே ஃபுல் அடிக்க வேண்டும். அதை செய்யாத அவர் அனைவரும் எனக்கு எதிராக ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசுவார்கள் என்று நினைத்துக் கொண்டு வெள்ளை கோட்டுக்கு உள்ளே சென்று நிற்கிறார். இந்த ஈகோ உங்களிடம் இருக்கக்கூடாது. நீங்கள் அனைத்து நேரங்களிலும் அனைத்தையும் கட்டுப்படுத்த முடியாது. தற்போது அதில் நீங்கள் முன்னேறுவதற்கு முயற்சித்தாலும் எந்த உயரத்தில் வரும் பந்துகளில் ஃபுல் சாட் அடிக்க வேண்டும் என்பதை தெரிந்து விளையாடுங்கள்” என்று கூறினார்.

Advertisement