அது தான் தோனியின் தரம், நாங்க இல்லனா அந்த ஜாம்பவான் 2007லேயே ரிட்டையர் ஆகிருப்பாரு – கேரி கிறிஸ்டன் பேட்டி

- Advertisement -

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கேரி கிறிஸ்டன் தனது சொந்த நாட்டில் விட இந்தியாவில் நிறைய ரசிகர்களை கொண்டுள்ளார் என்றே சொல்லலாம். ஏனெனில் 2007 உலக கோப்பையில் ராகுல் டிராவிட் தலைமையில் படுதோல்வியை சந்தித்த பின் இந்திய அணிக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட ஆஸ்திரேலியாவை சேர்ந்த பயிற்சியாளர் கிரேக் சேப்பல் நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 2007 டி20 உலக கோப்பையில் தலைமை பயிற்சியாளர் இல்லாமலேயே தோனி தலைமையில் சாம்பியன் பட்டம் வென்று கொதித்தெழுந்த இந்திய அணிக்கு அந்த வருடத்தின் டிசம்பர் மாதம் கேரி கிறிஸ்டன் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

Kirsten 1

- Advertisement -

அவர் வந்த போது வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் கேப்டனாக இருந்த எம்எஸ் தோனி அடுத்த வருடத்திலேயே 3 வகையான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த வகையில் 2009 முதல் கேரி கிறிஸ்டன் – தோனி தலைமையில் புதிய பாதையில் நடந்த இந்திய கிரிக்கெட் அணி முதலில் டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரலாற்றில் முதல் முறையாக நம்பர் ஒன் அணியாக முன்னேறி சாதனை படைத்தது. அடுத்த வருடமே சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அவர்களது தலைமையில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 28 வருடங்கள் கழித்து கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.

ரிட்டையர் ஆகிருப்பாரு:
அப்போது இந்திய பேட்டிங் துறையை 24 வருடங்கள் தோள் மீது சுமந்த சச்சினை தங்களுக்கு தோள் மீது சுமந்த இந்திய வீரர்கள் சரித்திர வெற்றிக்கு குருவாக செயல்பட்ட கேரி கிறிஸ்டனையும் தோள் மீது சுமந்தது ரசிகர்களால் மறக்கவே முடியாது. மேலும் 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வெல்லும் இந்திய அணியுடன் இருந்த அவர் அடுத்த வருடமே பதவி காலம் முடிந்ததால் இந்திய அணியிலிருந்து விலகினார். இருப்பினும் அவரைப் போன்ற ஒரு பயிற்சியாளர் வேண்டும் என்பதே இப்போதைய ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. இந்நிலையில் தாம் இந்திய அணிக்குள் நுழைந்த போது சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறும் எண்ணத்துடன் இருந்ததாக கேரி கிறிஸ்டன் கூறியுள்ளார்.

Kirsten

இருப்பினும் தம்முடன் தோனி சேர்ந்த புதிய கூட்டணியில் சச்சின் முழுமையான சுதந்திரத்தை பெற்று மகிழ்ச்சியுடன் விளையாட துவங்கியதாக தெரிவிக்கும் அவர் இந்திய வீரர்களை சரியாக பயன்படுத்திய தோனி தனித்துவமான கேப்டன் என்று பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அந்த சமயத்தில் நல்ல திறமை கொண்ட இந்திய அணியை உலகின் அனைத்து அணிகளையும் தோற்கடிக்கும் அணியாக மாற்றுவதற்கான தலைமை என்னிடம் தேவைப்பட்டது. அனைத்து விதமான பயிற்சியாளர்களுக்கும் அது போன்ற நிலைமை தான் ஏற்படும். அந்த நேரத்தில் நான் பொறுப்பேற்ற போது இந்திய அணியில் நிறைய பேர் என்னை நினைத்து பயந்தனர்”

- Advertisement -

“அந்த சமயத்தில் இந்திய அணிக்குள் நிறைய மகிழ்ச்சியில்லை. அதனால் ஒவ்வொருவரையும் புரிந்து கொண்டு அவர்களை மகிழ்ச்சியுடன் கிரிக்கெட்டை விளையாட வைப்பதற்கான முக்கியத்துவத்தை நான் புரிந்து கொண்டேன். குறிப்பாக இந்திய அணியில் நான் இணைந்த போது சச்சின் டெண்டுல்கர் மிகவும் மகிழ்ச்சியற்றவராக இருந்தார். தம்மால் இந்திய அணிக்கு நிறைய பங்காற்ற முடியும் என்று உணர்ந்த அவர் மகிழ்ச்சியுடன் விளையாட முடியாத நிலையில் இருந்தார். எனவே அவருடன் இணைந்து அவர் நினைப்பதை விட இந்திய அணிக்கு அதிக பங்காற்றும் வகையில் அவருக்கு உதவி செய்ய வேண்டியது எனது முக்கிய வேலையாக இருந்தது”

Kirsten 3

“மேலும் எந்த பயிற்சியாளர்களும் ஜெர்சியின் பின்புறத்தில் இருக்கும் தங்களது பெயருக்காக அல்லாமல் முன்புறத்தில் இருக்கும் நாட்டின் பெயருக்காக விளையாடும் வீரர்களையே விரும்புவார்கள். குறிப்பாக அதிகப்படியான எதிர்பார்ப்புகளை கொண்ட இந்திய அணியில் நிறைய சூப்பர் ஸ்டார்கள் இருந்தால் சரியானவர்களை கண்டறிவது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் கோப்பை வெல்வதற்கு எந்த மாதிரியான வீரர்கள் தேவை என்பதில் தோனி மிகவும் கவனத்துடன் இருந்தார்”

இதையும் படிங்கIND vs AUS : இனிமேலும் அவர ஒய்ட் பால் ப்ளேயர்னு சொல்லாதீங்க, இந்திய வீரரை ஓப்பனாக பாராட்டிய மார்க் வாக்

“அதை வெளிப்படையாக பேசுவதிலும் அவர் சிறந்தவராக இருந்தார். அவரது அணுகுமுறை பல வீரர்களை ஒரு கோட்டில் இணைத்தது. குறிப்பாக அவரது தலைமையில் சச்சின் மகிழ்ச்சியுடன் விளையாடத் துவங்கினார். அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் நானும் தோனியும் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கேப்டன் – பயிற்சியார் பார்ட்னர்ஷிப்பை அமைத்தோம். எங்களுடைய அந்தப் பயணம் இறுதியில் வெற்றிகரமாக முடிந்தது” என்று கூறினார்.

Advertisement