IND vs AUS : இனிமேலும் அவர ஒய்ட் பால் ப்ளேயர்னு சொல்லாதீங்க, இந்திய வீரரை ஓப்பனாக பாராட்டிய மார்க் வாக்

Mark Waugh
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு 70 ரன்கள் மற்றும் 7 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டாலும் சதமடித்து 120 ரன்கள் குவித்த கேப்டன் ரோகித் சர்மா அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டார் என்றே சொல்லலாம். ஏனெனில் சுழலுக்கு சாதகமாக இருந்த பிட்ச்சில் ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட தரமான வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணியினர் 2 இன்னிங்ஸ்சிலும் சொற்ப ரன்களில் அவுட்டாகி திண்டாடினர்.

அதே போல இந்திய அணியிலும் விராட் கோலி, புஜாரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அறிமுகப் போட்டியில் விளையாடிய டோட் முர்பியிடம் சிக்கினார்கள். ஆனால் அதே மைதானத்தில் ஆரம்பத்தில் அதிரடியாக செயல்பட்டு விரைவாக அரை சதம் கடந்து ஆஸ்திரேலியா மீது அழுத்தத்தை போட்ட ரோகித் சர்மா நேரம் செல்ல செல்ல நிதானமாக செயல்பட்டு 15 பவுண்டரி 2 சிக்ஸருடன் 56.60 என்ற தரமான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி இந்தியாவின் இன்னிங்ஸ் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். மேலும் ஆரம்பத்தில் நாக்பூர் பிட்ச் வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்ததாக விமர்சித்த ஆஸ்திரேலியர்கள் அவரது பேட்டிங்கை பார்த்து தங்களது கருத்து தவறு என்பதை ஒப்புக் கொண்டார்கள்.

- Advertisement -

டெஸ்ட் ப்ளேயர்:
அந்தளவுக்கு சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 2013இல் அப்போதைய கேப்டன் தோனி ஓப்பனிங் வீரராக களமிறங்க வாய்ப்பு கொடுத்ததை பயன்படுத்தி வெள்ளை கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டார். ஆனாலும் கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் போட்டிகளில் ரொம்பவே தடுமாறியதால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்ற விமர்சனங்களை சந்தித்த அவர் 2019 உலக கோப்பையில் 5 சதங்களை அடித்த காரணத்தால் முதல் முறையாக ஓப்பனிங் வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார்.

அப்போதிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜொலிக்கத் துவங்கிய அவர் 2021ஆம் ஆண்டு வேகத்துக்கு சாதகமான லண்டன் ஓவல் மைதானத்தில் சதமடித்து தற்போது சுழலுக்கு சாதகமான நாக்பூரிலும் சதமடித்து தன்னை மிகச் சிறந்த டெஸ்ட் வீரர் என்பதையும் நிரூபித்துள்ளார். அதனால் இனிமேலும் ரோகித் சர்மாவை சிறந்த வெள்ளைப் பந்து கிரிக்கெட் வீரர் என்று மட்டும் சொல்ல முடியாது என முன்னாள் ஆஸ்திரேலிய மார்க் வாக் வெளிப்படையாக பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மா மிகவும் சுவாரசியமான டெஸ்ட் கேரியரை கொண்டுள்ளார் அல்லவா? குறிப்பாக ஆரம்ப காலங்களில் அவர் தனது தகுதிக்கேற்றார் போல் செயல்படவில்லை. அதனால் அவர் தனது ஒழுக்கத்தில் பணியாற்ற வேண்டியிருந்தது. ஆனால் அவர் எப்போதும் க்ளாஸ் தொடுதலை கொண்டவராகவே இருந்தார். அவரும் வரலாற்றின் கிரேட் வீரர்களைப் போல சில நேரங்களை எடுத்துக் கொண்டார். அவரது டெக்னிக் மிகவும் எளிமையானதாகும். அவர் எப்போதும் ஒயிட் பால் கிரிக்கெட்டில் மேட்ச் வின்னர். ஆனால் இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் மேட்ச் வின்னர்”

“தற்போது அவரிடம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவையான ஒழுக்கத்துடன் அனைத்து வகையான ஷாட்டுகளும் உள்ளது. இவை அனைத்தும் மனதளவிலான போட்டியாகும். தற்போது அவர் அனைத்து வகையான சூழ்நிலையிலும் அசத்தும் கிளாஸ் வீரராக உருவெடுத்துள்ளார். வெளிநாட்டு சூழ்நிலைகளிலும் இந்திய சூழ்நிலைகளிலும் அவர் சிறப்பாக விளையாடுகிறார். குறிப்பாக பந்தை மிகவும் உன்னிப்பாக கவனித்து விளையாடும் திறமை கொண்ட அவரிடம் சிறந்த கைகள் உள்ளன. அத்துடன் போட்டியை கச்சிதமாக படிக்கும் அவர் சூழ்நிலைகளுக்கு ஏற்றார் போல் கியரை மாற்றி மாற்றி விளையாடுகிறார்” என்று பாராட்டினார்.

இதையும் படிங்க: IND vs AUS : வேணும்னா பாருங்க 2வது டெஸ்டில் அவரோட சொந்த ஊர்ல கம்பேக் செஞ்சூரி அடிக்கப்போறாரு – கவாஸ்கர் கணிப்பு

முன்னதாக ரோகித் சர்மா தற்போது மிகச் சிறந்த டெஸ்ட் வீரராக உருவெடுத்துள்ளதாக மற்றொரு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயன் சேப்பல் சமீபத்தில் பாராட்டியிருந்தார். அந்த வரிசையில் மார்க் வாக் பாராட்டுகளையும் பெற்றுள்ள அவர் இப்படி நிறைய வெளிநாட்டு ஜாம்பவான் வீரர்கள் பாராட்டும் அளவுக்கு உண்மையாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தரம் உயர்ந்துள்ளது ரோகித் சர்மாவின் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement