அவரும் மனுஷன் தானே. இந்தமுறை தப்பு பண்ணிட்டாரு அதுக்கென்ன? சீனியர் வீரரை ஆதரித்த – கங்குலி

Ganguly (2)
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரானது வரும் 29-ம் தேதியுடன் நிறைவடைகிறது. கடந்த ஆண்டு 8 அணிகளுடன் விளையாடப்பட்டு வந்த இந்த ஐபிஎல் தொடரானது இந்த ஆண்டு 10 அணிகளுடன் மிகப் பிரம்மாண்டமான அளவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் புதிதாக இணைந்துள்ள குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வேளையில் ஜாம்பவான் அணிகளான சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோசமான சரிவை சந்தித்தன.

CskvsMi

- Advertisement -

அதிலும் குறிப்பாக ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது இம்முறை புள்ளி பட்டியலில் 10-வது இடத்தை பிடித்து வெளியேறியது. இதுவரை ஐபிஎல் வரலாற்றில் இவ்வளவு பெரிய சரிவை சந்திக்காத மும்பை அணி இம்முறை கடைசி இடத்தை பிடித்து வெளியேறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த தொடரில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் மோசமான பேட்டிங் பார்ம் ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது, ஏனெனில் எப்போதுமே பேட்டிங்கில் அதிரடி காட்டும் ரோகித் சர்மா உலக கோப்பை அருகில் வரும் வேளையில் சீரற்ற பார்ம் காரணமாக மோசமாக விளையாடி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ROhit Sharma MI vs KKR

நடப்பு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா வெறும் 268 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். அதோடு அவரது ஸ்ட்ரைக் ரேட் மிகவும் மோசமாக உள்ளது. இதன் காரணமாக அவரது பேட்டிங் மற்றும் கேப்டன்சி மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் ரோஹித் சர்மாவின் இந்த மோசமான பார்ம் குறித்து பேசியுள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரான கங்குலி கூறுகையில் :

- Advertisement -

அனைவரும் மனிதர்கள் தான் எனவே தவறு நடப்பது என்பது இயல்பான ஒன்று. ரோகித் கேப்டன்சி ரெக்கார்ட் மிகவும் சிறப்பானது. ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ள அவர் ஆசிய கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க : இனியாவது கொஞ்சம் வேகமா பேட்டிங் செய்யுங்க – லக்னோ அணியின் நட்சத்திர வீரரை விளாசும் முன்னாள் வீரர்

அவரது கேப்டன்சி-யில் எந்த ஒரு குறையும் இல்லை. இதுபோன்ற சறுக்கல் அனைவருக்கும் ஏற்படும் ஒன்றுதான். நிச்சயம் அவர் இந்த சரிவில் இருந்து மீண்டு வருவார் என கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement