இனியாவது கொஞ்சம் வேகமா பேட்டிங் செய்யுங்க – லக்னோ அணியின் நட்சத்திர வீரரை விளாசும் முன்னாள் வீரர்

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 25-ஆம் தேதி நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் பெங்களூருவிடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்ற லக்னோ இந்த தொடரிலிருந்து கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறியது. இத்தனைக்கும் அப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு 20 ஓவர்களில் அதிரடியாக 207/4 ரன்களை சேர்த்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக இளம் வீரர் ரஜத் படிடார் அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 12 பவுண்டரி 7 சிக்சருடன் சதமடித்து 112* (54) ரன்கள் விளாசினார். அதனால் எலிமினேட்டர் போட்டியில் சதமடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற வரலாற்று சாதனை படைத்த அவருடன் கடைசி நேரத்தில் பட்டையை கிளப்பிய தினேஷ் கார்த்திக் 37* (23) ரன்கள் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார்.

Rajat Patidar 112

- Advertisement -

லக்னோ தோல்வி:
அதை தொடர்ந்து 208 என்ற இலக்கை துரத்திய லக்னோவுக்கு குயின்டன் டி காக் 6 (5) மன்னன் வோஹ்ரா 19 (11) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 41/2 என தடுமாறியபோது ஜோடி சேர்ந்த கேப்டன் கேஎல் ராகுல் அடுத்து வந்த தீபக் ஹூடாவுடன் ஜோடி சேர்ந்து 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்தார். இதில் அதிரடி காட்டிய தீபக் ஹூடா 45 (26) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஸ்டோனிஸ் 9 (9) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக நின்ற கேஎல் ராகுல் கடைசி நேரத்தில் அதிரடி காட்டி பினிஷிங் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி வரை பொறுமையாகவே பேட்டிங் செய்த அவர் 3 பவுண்டரி 5 சிக்சருடன் 79 (58) ரன்களை 136.21 என்ற சுமாரான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து 19-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதனால் ரன்ரேட் எகிறியதாலும் கடைசி 8 பந்துகளில் 29 ரன்கள் தேவைப்பட்டதாலும் ஏற்பட்ட அழுத்தத்தால் அடுத்து வந்த க்ருனால் பாண்டியா டக் அவுட்டானார். அதனால் 20 ஓவரில் லக்னோ 193/6 ரன்கள் மட்டுமே எடுத்ததால் வென்ற பெங்களூரு மே 27இல் நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் காத்திருக்கும் ராஜஸ்தானுடன் மோதுவற்கு தகுதி பெற்றது.

Harshal Patel vs LSG

மெதுவாக ராகுல்:
இப்போட்டியில் 79 (58) ரன்கள் எடுத்து வெற்றிக்கு போராடிய போதிலும் அதிரடியாக விளையாட தவறிய கேஎல் ராகுல் தான் தோல்விக்கு காரணம் என்று பல ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அவரை விமர்சித்து வருகின்றனர். அது உண்மை தான் என தெரிவிக்கும் முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வரும் காலங்களில் நீண்ட நேரம் பேட்டிங் செய்வதை விட அதிரடியாக பேட்டிங் செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை கேஎல் ராகுல் உணர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒவ்வொரு முறையும் அவர் பெரிய ஷாட் அடிக்க முடிவு செய்தபோது அது வரவில்லை. ஹேசல்வுட்க்கு எதிராக ஒரு சில பெரிய ஷாட்களை சிறப்பாக அடித்தார். அவர் நினைக்கும் போதெல்லாம் அவரால் அதை அடிக்க முடிகிறது. ஆனால் போட்டியை கடைசி வரை எடுத்துச் செல்ல வேண்டும் அல்லது அதிரடியை காட்டிலும் நீண்ட நேரம் போட்டியை எடுத்துச் செல்லவேண்டும் என்று அவர் நினைத்தார். ஒரு அணியின் ஒரு வீரராக, கேப்டனாக, துருப்புச் சீட்டாக உருவானபின் இதுபோன்ற கேஎல் ராகுலை நிறைய முறை பார்த்துவிட்டோம். விராட் கோலி, எம்எஸ் தோனி மற்றும் இந்த சீசனை தவிர்த்து ரோகித் சர்மா போன்றவர்கள் அந்த பொறுப்பை விரும்புபவர்கள்” என்று கூறினார்.

Sanjay

மாறுங்க:
அதாவது எம்எஸ் தோனி, விராட் கோலி போன்றவர்கள் போட்டியை கடைசி வரை எடுத்துச் சென்று வெற்றி பெறுவதைப் போல கேஎல் ராகுல் முயற்சித்ததாக கூறும் சஞ்சே மன்ஜரேகர் அது அவருக்கு எப்போதும் செட்டாகாது என்று தெரிவிக்கிறார். எனவே அதைப் புரிந்து கொண்டு வரும் காலங்களில் சொந்த சாதனைகளுக்காக அல்லாமல் அணிக்காக அதிரடியாக விளையாட முயற்சிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

இதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “கேஎல் ராகுல் நீண்ட நேரம் பேட்டிங் செய்வதை விட வேகமாக பேட்டிங் செய்யும்போது அவரது அணிகள் பயன்பெற்ற ஆட்டங்களை பார்த்துள்ளோம். போட்டியை முடிக்கும் அளவுக்கு கடைசிவரை பேட்டிங் செய்ய வேண்டும் என்ற பொறுப்பு அவருக்கு பொருந்தாது என்று நினைக்கிறேன். ஒருவேளை நான் அவரின் பயிற்சியாளராக இருந்தால் நீங்கள் போட்டியை வெற்றி பெற வேண்டும் என நினைக்காமல் மாறாக சிறப்பாக அதிரடியாக விளையாடி மகிழ்ச்சியடையுங்கள் என்றே கூறுவேன்”

இதையும் படிங்க : இப்படி ஒரு சூழ்நிலையில் சதமடித்தது நீங்க மட்டும் தான். பட்டிதாரை மனதார பாராட்டிய – விராட் கோலி

“அதன் காரணமாகவே சர்வதேச கிரிக்கெட்டில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் ரோகித் சர்மா, விராட் கோலியை விட சிறப்பாக உள்ளது. தனது அணிக்கு போட்டியை வென்று கொடுக்க வேண்டும் என்ற அவரின் எண்ணம் சரியாக இருந்தாலும் 16 ஓவர்கள் விளையாடி 120 – 130 என்ற ஸ்டிரைக் ரேட்டில் பேட்டிங் செய்தால் கடைசி நேரத்தில் இதர பேட்ஸ்மேன்களுக்கு அது அழுத்தத்தை கொடுத்துவிடும்” என்று கூறினார்.

Advertisement