என்னால அதப்பத்தி பேசமுடியாது. விராட் கோலி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு – காண்டாகி பதிலளித்த கங்குலி

Ganguly-3
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டபோது இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டார். மேலும் அவருக்கு பதிலாக ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் விராட் கோலியின் இந்த கேப்டன் பதவி நீக்கம் குறித்து பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில் : விராட் கோலி டி20 கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து விலகும் போது தான் அந்த பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.

Kohli

- Advertisement -

ஆனால் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் விராத் கோலி சில காரசாரமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தென்னாபிரிக்க அணிக்கெதிரான இந்திய அணியை தேர்வு செய்து அறிவிக்கும் எனக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் தான் தேர்வு குழுவினரிடமிருந்து போன் வந்ததாகவும் அப்போது அவர்கள் என்னை ஒருநாள் கிரிக்கெட்டின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதாக தெரிவித்தார்கள்.

ஆனால் நான் அப்போது ரோகித் சர்மாவின் கேப்டன் பதவியை ஆதரித்து தான் பேசினேன். அதோடு என்னை யாரும் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என வலியுறுத்தவில்லை என்றும் கூறியிருந்தார். இப்படி கங்குலி மற்றும் விராட் கோலி ஆகியோரது இரண்டு கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்க தற்போது இது பெரிய புகச்சலை உண்டாக்கி உள்ளது.

Ganguly

ஏனெனில் இதுவரை யார் சொன்னது உண்மை என்ற தெளிவு இல்லாமல் தற்போது அவர்களுக்கு இடையே ஏதேனும் மோதல் அல்லது உரசல் இருக்கிறதா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இன்று மாலை பிசிசிஐ தலைவர் கங்குலி பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் விராட் கோலி குறித்த கேள்வியை கேட்டதுமே :

- Advertisement -

இதையும் படிங்க : இனிமேல் இந்திய அணியின் முக்கிய வீரராக இவர் இருப்பாரு. தமிழக வீரரை புகழ்ந்த – ரோஹித் சர்மா

அவர் அதைப் பற்றி பேச விரும்பவில்லை. மேலும் இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பிலும் பேச மாட்டேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். அதுமட்டுமின்றி இந்த பிரச்சினையை பி.சி.சி.ஐ யிடம் விட்டுவிடுங்கள் என்று கங்குலி கூறியதால் ஏதோ பெரிய பிரச்சனை இதற்குப் பின்னால் இருப்பது அம்பலமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement