இனிமேல் இந்திய அணியின் முக்கிய வீரராக இவர் இருப்பாரு. தமிழக வீரரை புகழ்ந்த – ரோஹித் சர்மா

Rohith
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியானது லீக் சுற்றின் முடிவிலேயே பரிதாபமாக வெளியேறியது. அதனைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். ரோஹித்தின் தலைமையில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணியானது அண்மையில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 3 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

rohith

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக மீண்டும் கம்பேக் கொடுத்த அஷ்வின் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தியதால் இனிவரும் தொடர்களில் மீண்டும் ஒயிட்பால் கிரிக்கெட்டில் அவர் நிச்சயம் இந்திய அணியில் விளையாடுவார் என்று கேப்டன் ரோகித் கூறியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : அஷ்வின் போன்ற ஒரு வீரர் அணியில் இருப்பது நமக்கு மிகவும் சாதகமாக அமையும். ஏனெனில் அனுபவம் வாய்ந்த அஷ்வின் போட்டியின் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவரை பயன்படுத்திக்கொள்ளலாம். பந்துவீச்சில் பவர் பிளே, மிடில் ஓவர் அல்லது இக்கட்டான வேளையில் போன்ற எந்த சூழ்நிலையிலும் அவரால் சிறப்பாக பந்து வீச முடியும்.

ashwin 1

அதேபோன்று ஆட்டத்தின் தன்மையை புரிந்து கொள்ளும் அளவிற்கு அவர் முதிர்ச்சியுடன் இருப்பதனால் இனிவரும் தொடர்களில் முக்கிய வீரராக இருப்பார் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஒரு கேப்டனாக ஒரு பவுலரை அணுகும்போது அவர் ஒரே விதமாக பந்துவீசும் பந்துவீச்சாளராக இருக்கக் கூடாது. குறிப்பாக அஷ்வின் எந்த ஒரு பேட்ஸ்மேனுக்கும் ஒரே ஓவரில் பலவகையான பந்துகளை வீசுவார்.

இதையும் படிங்க : யாரா இருந்தா என்ன? இந்த நேரத்துல இப்படியா பேசுவீங்க? – கங்குலி மற்றும் கோலியை விளாசிய கபில் தேவ்

இதுபோன்று வித்தியாசமான வெறியேஷன்களை வைத்திருக்கும் பவுலர்கள் கேப்டனுக்கு மிகவும் உதவியாக இருப்பார்கள் என்று ரோஹித் கூறினார். இதன் மூலம் நிச்சயம் அஷ்வின் இனி வரும் போட்டிகளில் தொடர்ச்சியாக இந்திய அணியில் நீடிப்பார் என்று ரோஹித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement