
இந்தியாவில் தற்போது பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகளின் முடிவில் குஜராத், ராஜஸ்தான், லக்னோ மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றனர். அதில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் அணி இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுவிட்டது.
அதனைத் தொடர்ந்து தற்போது லக்னோ மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே இரண்டாவது குவாலிபயர் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முக்கியமான போட்டியில் பெங்களூரு அணியை விட ரன் ரேட் விகிதத்தில் உயர்ந்திருந்த டெல்லி அணி மும்பை அணிக்கு எதிராக தோல்வி அடைந்து பிளே ஆப் வாய்ப்பினை தவறவிட்டது.
அந்த போட்டியில் மும்பை அணியின் அதிரடி வீரரான டிம் டேவிட்டின் விக்கெட்டை போட்டியின் இக்கட்டான நேரத்தில் சரியாக கணிக்க முடியாத பண்ட் அவரது விக்கெட் விழும் வாய்ப்பை தவறவிட்டார். அவரது அந்த முடிவு போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதன் காரணமாக அவரது கேப்டன்சி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான கங்குலி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ரிஷப் பண்டினை தோனியுடன் ஒப்பிடாதீர்கள். ஏனெனில் தோனி சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி ஐ.பி.எல் கிரிக்கெட்டிலும் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்.
தோனி ஐபிஎல், டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி என 500க்கும் மேற்பட்ட போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதனால் தோனியுடன் ரிஷப் பண்டினை ஒப்பிடுவது நியாயமல்ல. மேலும் அவர் தற்போது ஐபிஎல் துவக்க காலத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க : உழைத்தால் வாய்ப்பு தாமாக வரும், எப்போதும் என் மகனுக்காக சான்ஸ் கேட்டதில்லை – ஜாம்பவான் கருத்து
நிச்சயம் ரிஷப் பண்ட் அவருடைய கேப்டன்சியில் உள்ள தவறுகளை சரிசெய்து அவரது அணியை சிறப்பாக வழிநடத்துவார் என்று நம்பிக்கை இருப்பதாக கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.