உழைத்தால் வாய்ப்பு தாமாக வரும், எப்போதும் என் மகனுக்காக சான்ஸ் கேட்டதில்லை – ஜாம்பவான் கருத்து

Arjun
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் கடந்த ஒரு மாதங்களாக நடைபெற்று முடிந்தன. அதில் ரோகித் சர்மா தலைமையில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என்ற சாதனை படைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் 8 தொடர் தோல்விகள் உட்பட வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சீசனில் 10 தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது. இத்தனைக்கும் சென்னை உட்பட இதர எஞ்சிய 9 அணிகளுக்கு கிடைக்காத சொந்த மண்ணில் விளையாடும் பொன்னான வாய்ப்பு கிடைத்த போதிலும் சுமாரான பேட்டிங் – பவுலிங்கை வெளிப்படுத்திய அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது அந்த அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

MI Mumbai Indians

- Advertisement -

ஏலத்தின் போது விளையாட மாட்டார் என தெரிந்தும் இங்கிலாந்தின் ஜோஃப்ரா ஆர்ச்சரரை 8 கோடி கொடுத்து வாங்கியது, 15.25 கோடிக்கு வாங்கப்பட்ட இசான் கிசான் பெரிய அளவில் சிறப்பாக செயல்பட தவறியது, கேப்டன் ரோகித் சர்மா பேட்டிலிருந்து ரன்கள் வர மறுத்தது, பும்ராவை தவிர ஏனைய பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியது என பல அம்சங்கள் அந்த அணியின் இந்த அவமானம் நிறைந்த தோல்விகளுக்கு முக்கிய பங்காற்றியது.

அர்ஜுன் டெண்டுல்கர்:
பொதுவாக ஐபிஎல் தொடரில் ஒரு அணி ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டால் அடுத்த தலைமுறை இளம் வீரர்களை கண்டறிவதற்காக கடைசி கட்ட போட்டிகளில் வாய்ப்பளிப்பார்கள். அந்த வகையில் மும்பை அணியில் கடந்த 2020 முதல் நெட் பவுலராக இருந்து வந்த முன்னாள் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை இந்த முறை 30 லட்த்துக்கு அந்த அணி நிர்வாகம் நேரடியாக அணிக்குள் வாங்கியது. ஆனால் பிளே ஆப் சுற்று வாய்ப்பு பறிபோன பின்பும் கூட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

குறிப்பாக முகமது அசாருதீன், ஆகாஷ் சோப்ரா போன்ற ஒருசில முன்னாள் இந்திய வீரர்கள் அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே கேட்டுக்கொண்டனர். ஆனாலும் ரோகித் சர்மா மற்றும் மும்பை அணி நிர்வாகம் அவருக்கு வாய்ப்பு தர மறுத்துவிட்டது. இத்தனைக்கும் அந்த அணியின் ஆலோசகராக அவரின் தந்தை மற்றும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

பரிந்துரை இல்லை:
ஜாம்பவானின் மகன் பரிந்துரையின் பெயரில் எளிதாக உள்ளே நுழைந்து விட்டார் என்ற விமர்சனம் எழுந்து விடக்கூடாது என்பதற்காக மும்பை அவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆலோசகராக இருந்தாலும் கூட 11 பேர் கொண்ட அணியை தேர்வு செய்வதில் தாம் எப்போதுமே தலையிடுவது கிடையாது என்பதால் தனது மகனை தேர்வு செய்ய மும்பை நிர்வாகத்திடம் எப்போதும் பரிந்துரை செய்ததில்லை என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

arjun 3

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.”இந்த கேள்வி மாறுபட்டது. இது பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பது முக்கியம் கிடையாது. ஏனெனில் இந்த சீசன் ஏற்கனவே முடிந்துவிட்டது. மேலும் தேர்வு பற்றி கேட்டால் நான் எப்போதுமே தேர்வு விஷயங்களில் தலையிடுவது கிடையாது. அவை அனைத்தையும் அணி நிர்வாகத்திடமே விட்டுவிடுவேன். ஏனெனில் நான் அவ்வாறு தான் செயல்பட்டேன். உனது பாதை எப்போதும் சவாலானதாகவும் கடினம் நிறைந்ததாகவும் இருக்கும் என்றே எப்போதும் அர்ஜுனிடம் கூறுவேன். நீ கிரிக்கெட்டை விரும்பியதாலேயே அதை விளையாட துவங்கினாய் என்பதால் அதை தொடர்வதற்கு தொடர்ந்து கடினமாக உழைத்தால் நல்ல முடிவுகள் தாமாக தேடிவரும் என்று எப்போதும் அவரிடம் கூறுவேன்” என பேசினார்.

அதாவது சாதாரணமாகவே மும்பை அணி நிர்வாகத்தின் தேர்வு விஷயத்தில் தலையிடுவது கிடையாது என்று கூறும் சச்சின் டெண்டுல்கர் தனது மகனுக்காக அந்த அணி நிர்வாகத்திடம் ஒருபோதும் வாய்ப்பு கேட்டதில்லை என்று கூறினார். மேலும் அர்ஜுன் டெண்டுல்கர் கிரிக்கெட்டை விரும்பி விளையாட துவங்கிய காரணத்தால் அதில் பரிந்துரை எதுவும் இல்லாமல் கடுமையாக உழைத்தால் தாமாகவே வெற்றி தேடி வரும் என்று அடிக்கடி தனது மகனிடம் கூறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

arjun tendulkar

ஏனெனில் தாமும் கடினமாக உழைத்து வெற்றி கண்டதாக சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சியுடன் கூறினார். ஒரு மகத்தான பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கரின் மகன் ஒரு வேகப்பந்து வீச்சாளராக கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கியுள்ள நிலையில் இதுவரை உள்ளூர் கிரிக்கெட்டில் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அர்ஜுன் டெண்டுல்கர் அதில் 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement