இந்த ஐ.பி.எல் தொடரில் கண்டறியப்பட்ட மிகச்சிறந்த புதுமுகம் இவர்தான் – சவுரவ் கங்குலி பாராட்டு

Ganguly
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் பல இளம் வீரர்கள் இடம் பெற்று விளையாடியும் உள்ளனர். முன்பெல்லாம் உள்ளூர் கிரிக்கெட் மற்றும் ரஞ்சி தொடர் என சிறப்பாக தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணிக்கு தேர்வாகும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் தற்போது இளம் வீரர்கள் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி ஒரு சீசனில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி விட்டாலே அவர்களுக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

LSG vs PBKS

- Advertisement -

அந்த அளவிற்கு இந்திய அணி நிர்வாகமும் ஐபிஎல் தொடருக்கான முக்கியத்துவத்தை அளித்து வருகிறது. மேலும் ஐபிஎல் தொடரில் சர்வதேச வீரர்களுடன் இணைந்து இந்தியாவைச் சேர்ந்த இளம் வீரர்கள் விளையாடுவதால் அவர்களுக்கு ஏகப்பட்ட அனுபவம் கிடைக்கிறது. அதோடு சர்வதேச கிரிக்கெட்டிற்கு இணையான அழுத்தத்தை அவர்கள் ஐபிஎல் போட்டிகளில் சந்திப்பதால் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையும் சமாளித்து விளையாடும் அளவிற்கு அவர்கள் தகுதி பெறுகின்றனர்.

இதன் காரணமாக வெகு விரைவாகவே அவர்களால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடிக்க முடிகிறது. அந்த வகையில் ஏற்கனவே பல வீரர்கள் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் விளையாடி உள்ளதை நாம் கண்டுள்ளோம். அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் பதினைந்தாவது ஐபிஎல் தொடரிலும் பல இளம் வீரர்கள் ஒவ்வொரு அணிக்காகவும தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் உம்ரான் மாலிக் மிக அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Umran Malik 5 Fer

இந்த தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் அந்த அணிக்காக 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர் குஜராத் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் வியக்க வைத்தார். அதோடு இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் அவர் தொடர்ந்து 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி வருவதால் அனைவரது கவனமும் அவர்மீது தான் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் கண்டெடுக்கப்பட்ட மிகச் சிறந்த புதுமுக வீரர் என்றால் அது உம்ரான் மாலிக் தான். அவர் தொடர்ச்சியாக அதிவேகமாக பந்துவீசி வருவது பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது என பி.சி.சி.ஐ யின் தலைவர் கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், நிச்சயம் அவருடைய திறமையை அவர் தொடர்ந்து வெளிப்படுத்தினால் அவருக்கு வாய்ப்பு பிரகாசமாகும் எனவே தொடர்ச்சியாக இதேபோன்று சிறப்பான ஆட்டத்தை அவரிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி உம்ரான் மாலிக்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இந்து என்பதால் அவமதிப்புக்கு ஆளானேன் – பாக் அணியில் நேர்ந்த கொடுமையை உடைக்கும் முன்னாள் பாக் வீரர்

ஏற்கனவே இந்த ஐபிஎல் தொடரில் மிக அதிவேகத்தில் பந்துவீசி வரும் அவரை உலக கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்றும் அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் முன்னாள் வீரர்கள் பலர் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement