இந்து என்பதால் அவமதிப்புக்கு ஆளானேன் – பாக் அணியில் நேர்ந்த கொடுமையை உடைக்கும் முன்னாள் பாக் வீரர்

Kaneria
- Advertisement -

கிரிக்கெட்டில் இனம், மொழி, சமயம் என அனைத்தையும் கடந்து நாட்டுக்காக ஒன்று சேர்ந்து விளையாடும் வீரர்கள் வெற்றி எனும் ஒற்றை கனியை பறித்து உலகில் தங்களது நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற நோக்கிலேயே முழு மூச்சை கொடுத்து விளையாடுகிறார்கள். அதுபோன்ற தருணங்களில் ஒரே நாட்டுக்காக விளையாடும் ஒருவர் நிறவெறி அல்லது இனவெறி அல்லது மதவெறி பிடித்து தனது அணியில் விளையாடும் சக வீரரை கேலி கிண்டல் செய்து அவமதிப்பது போன்ற கீழ்த்தரமான செயல்களெல்லாம் அரிதினும் அரிதாக எப்போதாவது மட்டுமே நிகழும்.

Pak

- Advertisement -

அது போன்ற மோசமான நிகழ்வு பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அதுவும் கடந்த பல வருடங்களுக்கு முன்பு அரங்கேறியது இப்போது வெளியாகியுள்ளது. பொதுவாக பாகிஸ்தான் என்பது ஒரு இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நாடு என்பதால் அதில் பெரும்பாலும் அந்த சமயத்தை சேர்ந்தவர்களே விளையாடும் சூழலில் எப்போதாவது மட்டுமே இந்து சமயத்தை சேர்ந்தவர்கள் விளையாடுவார்கள்.

டேனிஷ் கனேரியா:
அந்த வகையில் பாகிஸ்தானைச் சேர்ந்த டேனிஷ் கனேரியா கடந்த 2000 – 2010 ஆகிய 10 வருடங்கள் பாகிஸ்தான் அணிக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளராக விளையாடினார். 61 டெஸ்ட் போட்டிகளில் 261 விக்கெட்டுகளும் 18 ஒருநாள் போட்டிகளில் 15 விக்கெட்டுகளும் எடுத்த அவர் அந்த சமயத்தில் கங்குலி, டிராவிட் தலைமையில் விளையாடிய இந்திய அணிக்கு ஒரு சவால் மிகுந்த பவுலராக இருந்ததை இந்திய ரசிகர்கள் மறந்திருக்க முடியாது.

Kaneria 2

அப்படிப்பட்ட அவரை அந்த சமயத்தில் கேப்டனாக இருந்த நட்சத்திர பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி மத ரீதியில் கேliகிண்டலும் அவமதிப்பும் செய்ததாக தற்போது திடுக்கிடும் பின்னணியை டேனிஷ் கனேரியா பகிர்ந்துள்ளார். இது சம்மந்தமாக மற்றொரு நட்சத்திர முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் கூட தமக்கு ஆதரவாக ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

மதவெறி அப்ரிடி:
இது பற்றி நேற்று அவர் அளித்த ஒரு பேட்டியில் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தான் அணியின் நான் இந்து என்பதற்காக தரக்குறைவாக நடத்தப்பட்ட அந்த கொடுமை பற்றிய சோயப் அக்தர் தான் முதல் முதலில் பொது இடத்தில் பேசினார். அவருக்கு நான் தலைவணங்குகிறேன். ஆனால் அதன்பின் ஒருசில உயர் அதிகாரிகள் கொடுத்த அழுத்தத்தால் அதுபற்றி அவர் மேலும் பேசுவதை நிறுத்திவிட்டார். இருப்பினும் ஆம் எனக்கு அந்தக் கொடுமைகள் நடந்தது உண்மைதான். என்னை எப்போதும் சாகித் அப்ரிடி தர குறைவாக நடத்தினார். நாங்கள் இருவரும் ஒரே துறையில் (சுழல் பந்துவீச்சு) விளையாடினோம். ஆனால் அவர் எப்போதும் என்னை பெஞ்சில் அமர வைத்து ஒருநாள் போட்டிகளில் விளையாடாதவாறு செய்தார்”

Afridi-1

“அவர் நான் பாகிஸ்தான் அணியில் விளையாடுவதை விரும்பவில்லை. அவர் ஒரு பொய்யர், சூழ்ச்சி செய்பவர், நற்குணம் இல்லாதவர். இருப்பினும் அந்த சமயங்களில் அவை அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு எனது கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தினேன். அவர் இதர வீரர்களையும் எனக்கு எதிராக திருப்பிவிடும் வேலைகளை செய்தார். மேலும் நான் சிறப்பாக செயல்பட்டதால் எனது மீது பொறாமையும் கொண்டார். எது எப்படி இருந்தாலும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியதற்க்கு நான் மிகவும் பெருமையடைகிறேன்” என்று கூறினார்.

- Advertisement -

பொய்யான பழி:
அத்துடன் பொய்யான சூதாட்ட புகாரை தன் மீது சுமத்தி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தன்னை தடை செய்து விட்டதாக டேனிஷ் கனேரியா மேலும் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். அதிலும் சாகித் அப்ரிடியின் பங்கு உள்ளதாக தெரிவிக்கும் அவர் அதன் காரணமாக தனது பெயருக்கு இன்றுவரை களங்கம் விளைவித்து விட்டதாகவும் வேதனையை வெளிப்படுத்தினார்.

Kaneria

இது பற்றி ஆதங்கத்துடன் அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “என் மீது தவறான புகார்கள் சுமத்தப்பட்டது. அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரின் பெயருடன் எனது பெயரையும் இணைத்து விட்டார்கள். ஆனால் அவர் ஷாஹித் அப்ரிடி உட்பட மேலும் ஒருசில பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் நண்பர் என்பதை மறைத்து விட்டனர். ஆனால் எதற்காக என்னை குறி வைத்தார்கள் என்று தெரியவில்லை. இப்போதும் கூட நான் தவறு செய்யவில்லை என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் என் மீதான தடையை நீக்கக் கோருகிறேன். அப்போதுதான் கிரிக்கெட் சம்பந்தமான வேலைகளில் ஈடுபட முடியும்”

- Advertisement -

“சூதாட்டத்தில் சிக்கிய நிறைய பேருக்கு நாளடைவில் தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் எனக்கு அதுபோன்ற வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் எனது நாட்டிற்காக விளையாடி உள்ளேன் என்பதால் நானும் மற்றவர்களைப் போன்ற வாய்ப்புக்கு தகுதியானவன். தற்போது நான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை.

இதையும் படிங்க : ஹாட்ரிக் சதங்கள்! முரட்டு பார்முக்கு திரும்பிய புஜாரா. கவுண்டி போட்டியில் நடந்தது என்ன? – கம் பேக் உறுதி

அதேபோல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் எந்த வேலையும் கேட்கவில்லை. ஆனால் என் மீது விதிக்கப்பட்ட தடையை மட்டும் நீக்குங்கள். அப்போதுதான் எனது வேலைகளை நிம்மதியுடன் செய்ய முடியும்” என்று கூறினார்.

Advertisement