டி20 உலகக்கோப்பையில் விராட் விளையாடனுமா? வேண்டாமா? சவுரவ் கங்குலி அளித்த பதில் – விவரம் இதோ

Ganguly-and-Kohli
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் கடந்து 2022-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் விளையாடியதோடு அதனை தொடர்ந்து கடந்த ஓராண்டாகவே எவ்வித டி20 போட்டிகளிலும் அவர்கள் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ளது.

இதன் காரணமாக இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அவர்கள் விளையாடுவார்களா? என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் எதிர்வரும் இந்த டி20 உலக கோப்பையில் விளையாட இருவருமே விருப்பம் தெரிவித்துள்ளதால் அவர்கள் அணிக்குள் வருவார்களா? அப்படி வந்தால் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடரிலேயே அவர்களுக்கு இடம் கிடைக்க வேண்டும் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இதுவரை வெளியாகாத ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய வீரர்களின் பட்டியலில் இவர்கள் இருவரும் இடம் பிடித்தால் நிச்சயம் டி20 உலக கோப்பையில் விளையாடுவது உறுதி என்று கூறப்படுகிறது. ஆனால் பிசிசிஐ-யோ இளம் வீரர்களை கொண்டே டி20 உலக கோப்பையை அணுக திட்டமிட்டு இருக்கிறது.

இதன் காரணமாக ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவார்களா? என்பது இதுவரை உறுதியாக சொல்லப்பட முடியாத விடயமாக மாறியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் இந்த டி20 உலக கோப்பையில் விராட் கோலி விளையாடுவாரா? என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சவுரவ் கங்குலி கூறுகையில் :

- Advertisement -

இந்திய அணி ஒரு சிறந்த அணி. நமது அணி தோற்றால் உடனே குறை கூற ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் வெற்றியை யாரும் பெரிய அளவில் கொண்டாடுவதில்லை. என்னை பொறுத்தவரை இந்தியா மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால் முக்கிய வெற்றிகள் அதிர்ஷ்டம் இல்லாமல் தவறவிடப்படுகிறது.

இதையும் படிங்க : சதத்தோடு நிறுத்தாமல் வெறியாட்டம் ஆடிய புஜாரா.. சுப்மன் கில் இடத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – விவரம் இதோ

அந்த வகையில் எதிர்வரும் டி20 உலக கோப்பையை பொறுத்தவரை இந்திய அணி நிச்சயம் கோப்பையை வெல்ல தகுதியான ஒரு அணி. அதோடு இந்த டி20 உலக கோப்பையை ரோகித் சர்மா கேப்டனாக வழிநடத்த வேண்டும். அதேபோன்று அனுபவ வீரரான விராத் கோலியும் அந்த தொடரில் இடம்பிடித்து விளையாட வேண்டும் என்ற கருத்தினை கங்குலி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement