சதத்தோடு நிறுத்தாமல் வெறியாட்டம் ஆடிய புஜாரா.. சுப்மன் கில் இடத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – விவரம் இதோ

Pujara
- Advertisement -

தென்னாப்பிரிக்க மண்ணில் அண்மையில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தாலும் அந்த தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியதே இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

அந்த முதல் போட்டியில் கே.எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோரை தவிர வேறு எந்த வீரரும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான சுப்மன் கில் தனக்கு கிடைத்த இரண்டு வாய்ப்பையும் தவறவிட்டார்.

- Advertisement -

தென்னாப்பிரிக்க மண்ணில் அவரால் எப்படி செயல்பட முடியும் என்று? பரிசோதித்துப் பார்க்கப்பட்ட வேளையில் மூன்றாவது வீரராக களமிறங்கிய சும்மங்கில் இந்த தொடரில் ஒரு அரைசதம் கூட அடிக்காதது அனைவரும் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில் தற்போது இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட சீனியர் வீரரான சத்தீஸ்வர் புஜாரா தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை தொடரில் ஜார்கண்ட் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஆட்டத்தில் சௌராஷ்டிரா அணிக்காக களமிறங்கி நேற்று சதம் அடித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

அதோடு அந்த சதத்தை அப்படியே நிறுத்தாமல் இன்றும் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த புஜாரா இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ள புஜாராவை நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு கில் கொண்டுவரப்பட்டார்.

இதையும் படிங்க : எல்லாரும் தான் சொதப்புனாங்க.. அவர மட்டும் ட்ராப் பண்ணாதீங்க.. இளம் வீரருக்கு கவாஸ்கர் ஆதரவு

ஆனால் தற்போது தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சொதப்பி வரும் கில்லின் இடத்தில் மீண்டும் பழையபடி புஜாராவை இன்னும் சில ஆண்டுகள் தொடர வைக்கலாம் என்று ரசிகர்களின் ஆதரவும் பெருகி வருகிறது. ஏனெனில் சுப்மன் கில் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. அதே வேளையில் புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டுக்காகவே விளையாடி வரும் வீரர் என்பதனால் அவருக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement