எல்லாரும் தான் சொதப்புனாங்க.. அவர மட்டும் ட்ராப் பண்ணாதீங்க.. இளம் வீரருக்கு கவாஸ்கர் ஆதரவு

Sunil Gavaskar 4
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 1 (2) என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. குறிப்பாக முதல் போட்டியில் இன்னும் தோல்வியை சந்தித்தாலும் 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா 13 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை சமன் செய்து அசத்தியது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.

முன்னதாக வேகப்பந்து வீச்சாளர்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அந்த தொடரில் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியாமல் திண்டடினார்கள். அதனால் இந்திய அணியில் கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோரை தவிர்த்து கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில் போன்ற இதர வீரர்கள் சுமாராகவே செயல்பட்டனர்.

- Advertisement -

கவாஸ்கர் ஆதரவு:
அதே போல மிடில் ஆர்டரில் ஓரளவு நல்ல அனுபவத்தை கொண்டுள்ள மற்றொரு இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரும் 2 போட்டிகளையும் சேர்த்து வெறும் 41 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றத்தை கொடுத்தார். மேலும் ஏற்கனவே ஷார்ட் பிட்ச் பந்துகளில் தடுமாறுவதை வழக்கமாக வைத்துள்ள அவர் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் தரமான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இன்னும் முன்னேறவில்லை என்பதை இத்தொடரில் மீண்டும் காண்பித்துள்ளார்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க தொடரில் விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோரை தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மேன்களுமே சிறப்பாக செயல்படாததால் ஸ்ரேயாஸ் ஐயரை மட்டும் விமர்சித்து நீக்குவது சரியல்ல என சுனில் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். எனவே அடுத்ததாக நடைபெறும் தொடர்களில் அவரை நீக்கி விடாதீர்கள் என்று தேர்வுக் குழுவை கேட்டுக் கொள்ளும் கவாஸ்கர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அந்த தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் தடுமாறவில்லை. ஏனெனில் தென்னாப்பிரிக்காவில் இருக்கும் இது போன்ற பிட்ச்களில் உலகின் எந்த பேட்ஸ்மேன்களும் தடுமாறுவார்கள். சொல்லப்போனால் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுலை தவிர்த்து இந்த தொடரில் யாருமே பெரிய அளவில் ரன்கள் அடிக்கவில்லை. எனவே ஒருவர் மீது மட்டும் நீங்கள் கை விரலை காட்டி விமர்சிக்க முடியாது. அதனால் அவருக்கு தேர்வுக் குழுவினர் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்ப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என கூறினார்.

இதையும் படிங்க: சாதாரண மனுஷனே இல்ல.. அவர் தான் உண்மையான நம்பர் பிளேயர்.. சல்மான் பட் பாராட்டு

இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதில் பெரும்பாலான மைதானங்கள் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் சுழலுக்கு எதிராக இயற்கையாகவே நன்றாக விளையாடக்கூடியவர் என்பதால் அத்தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பலாம்.

Advertisement