சாதாரண மனுஷனே இல்ல.. அவர் தான் உண்மையான நம்பர் பிளேயர்.. சல்மான் பட் பாராட்டு

Salman Butt 3
- Advertisement -

நிறைவு பெற்ற தென்னாப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 13 வருடங்கள் கழித்து சமன் செய்து இந்தியா சாதனை படைத்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் ராஜாங்கம் நடத்திய அந்தத் தொடரில் இந்திய பேட்டிங் துறையில் கே.எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் மட்டுமே தங்களுடைய கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி மிகப்பெரிய சவாலை கொடுத்து சிறப்பாக செயல்பட்டார்கள்.

அதில் ராகுல் கூட முதல் போட்டியில் மட்டுமே அசத்தினார். ஆனால் 2 போட்டிகளிலும் தெனாப்பிரிக்காவுக்கு சவாலை கொடுத்த விராட் கோலி 172 ரன்களை குவித்து சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக கேப் டவுன் நகரில் முதல் நாளிலேயே 23 விக்கெட்டுகள் விழுந்த போது 26 பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்தார்கள். அந்த 26 பேரில் விராட் கோலி மட்டுமே அதிகபட்சமாக 46 ரன்கள் அடித்து தன்னுடைய தரத்தை நிரூபித்தார்.

- Advertisement -

உண்மையான நம்பர்:
மறுபுறம் விராட் கோலியை விட சிறந்தவர் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடும் பாபர் அசாம் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் 21, 14, 1, 41, 26, 23 என ஒரு இன்னிங்ஸில் கூட 50 ரன்கள் அடிக்காமல் சுமாராக செயல்பட்டார். அந்த வகையில் டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் சொந்த மண்ணாக இருந்தாலும் வெளிநாடாக இருந்தாலும் விராட் கோலி ஆல் ஏரியாவிலும் அசத்தி வருகிறார் என்று சொல்லலாம்.

இந்நிலையில் சவாலான கேப் டவுனில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் அசத்திய விராட் கோலி தான் உண்மையான உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் பாராட்டியுள்ளார். மேலும் கடினமான சூழ்நிலையிலும் அசத்தும் விராட் கோலி மனிதனே அல்ல என்று வித்தியாசமாக பாராட்டும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கவனம் செலுத்துவது முதல் தயாராவது வரை விராட் கோலியின் அனைத்து செயல்பாடுகளும் டாப்பாக இருக்கிறது. அவர் எப்போதாவது பேசி கேட்டுள்ளீர்களா? அவர் பேசிய வீடியோக்களை பார்க்கும் போது தன்னைப் பற்றியும் கிரிக்கெட்டைப் பற்றியும் விராட் கோலி ஆழமான அறிவைக் கொண்டிருப்பதை உங்களால் தெரிந்து கொள்ள முடியும். அவர் சாதாரண மனிதர் கிடையாது”

இதையும் படிங்க: இருப்பதிலேயே அந்த அணிக்கு தான் கஷ்டமான குரூப் அமைஞ்சுருக்கு.. 2024 உ.கோ அட்டவணை பற்றி கம்பீர்

“அவர் தான் கச்சிதமான உலகின் நம்பர் ஒன். உலகில் இது போன்ற செயல்பாடுகளை வெளிப்படுத்தும் 2 வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் வருங்காலத்தில் விராட் கோலி தான் நம்பர் ஒன்னாக இருப்பார். எனவே நாம் எந்த சர்வதேச வீரரையும் பற்றி பேசவில்லை. விராட் கோலியை தான் வருங்காலத்தில் அந்த வீரராக பேசுவோம்” என்று கூறினார்.

Advertisement