ரொம்ப வருஷமா ஆடுறாரு அவருக்கு தான் நீங்க துணைக்கேப்டன் பதவி குடுத்திருக்கனும் – சவுரவ் கங்குலி கருத்து

Ganguly
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற உள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் என மிகப் பெரிய தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த மிகப்பெரிய தொடரானது ரசிகர்கள் மத்தியில் தற்போதே கவனத்தை ஈர்த்துள்ளது.

Umesh-Yadav

- Advertisement -

இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது தலைமையின் கீழ் தனித்தனி அணிகளும் அறிவிக்கப்பட்டன.

அதில் டெஸ்ட் அணியில் புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் முகேஷ் குமார் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று டெஸ்ட் அணியில் அஜின்க்யா ராஹானே மீண்டும் துணைக்கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Jadeja 1

கடந்த ஆண்டு மோசமான பார்ம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்ட அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் மீண்டும் கம்பேக் கொடுத்து அடுத்த போட்டியிலேயே துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டு இருப்பது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ரகானேவிற்கு பதில் ஜடேஜா தான் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாக ரகானே மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது ஒரு பின்னோக்கிய ஒரு முடிவு என்று சொல்ல மாட்டேன்.

இதையும் படிங்க : TNPL 2023 : நடராஜன் அணிக்கு இப்படி பரிதாப நிலையா – முதல் பந்திலிருந்தே வீரத்தை காட்டிய மதுரை வென்றது எப்படி?

ஆனாலும் 18 மாதங்கள் அணியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவருக்கு மீண்டும் துணைக்கேப்டன் பதவி எந்த வகையில் வழங்கப்பட்டது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஜடேஜா நீண்ட காலமாக தொடர்ச்சியாக இந்திய டெஸ்ட் அணியில் விளையாடி வருகிறார். அந்த பொறுப்புக்கு அவரே பொருத்தமானவர் என்று தான் கருதுவதாக கங்குலி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement