விராட் கோலியின் அணுகுமுறை எனக்கு ரொம்ப புடிக்கும். ஆனா இந்தவொரு விஷயத்தில் அவர் மோசம் – கங்குலி பேட்டி

Ganguly-1
- Advertisement -

இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்க்கும் கேப்டனாக திகழ்ந்த விராட் கோலி டி20 உலகக் கோப்பைக்கு முன்பு தான் அந்த தொடர் முடிவடைந்ததும் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்பிறகு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருக்கப்போகிறேன் என்றும் அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்ட டெஸ்ட் அணியின் போது இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதவியையும் விராட் கோலியிடம் இருந்து பிசிசிஐ பறித்தது. இந்த கேப்டன்சி பறிப்பு விவகாரத்தில் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கும், பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும் இடையே மோதல் இருந்தது.

Ganguly

- Advertisement -

கடந்த சில நாட்களாகவே இவர்கள் இருவரின் மோதல் சமூகவலைதளத்தில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. ஏனெனில் விராட் கோலியின் கேப்டன் பதவி நீக்கம் குறித்து கங்குலி பேசுகையில் : டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என தனிப்பட்ட முறையில் விராட் கோலியை கேட்டுக்கொண்டதாக கங்குலி தெரிவித்திருந்தார். ஆனால் கோலி பதிலளிக்கும் போது : எனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு யாரும் என்னை வலியுறுத்தவில்லை என்று கூறியிருந்தார்.

இவர்கள் இருவரின் மாறுபட்ட கருத்து காரணமாக அவர்களுக்கு இடையே மோதல் இருப்பது தெளிவாக தெரிய வந்தது. இந்நிலையில் விராட் கோலியின் கேப்டன் பதவி பறிப்பு விவகாரத்தில் கங்குலி சரியான விளக்கத்தை அளிக்க வேண்டுமென முன்னாள் வீரர்கள் கபில்தேவ், மதன்லால் ஆகியோர் வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில் இது குறித்த கேள்விக்கு கங்குலி பதிலளிக்கையில் : விராட் கோலியின் அணுகுமுறை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவர் நிறைய சண்டையிடுவார் என்று கூறியுள்ளார்.

Ganguly

ஏற்கனவே கங்குலி அளித்திருந்த மற்றொரு பேட்டியில் கோலியின் விவகாரம் குறித்து தற்போது எதையும் கூற விரும்பவில்லை என்றும் இந்த விவகாரத்தை பிசிசிஐ பார்த்துக்கொள்ளும் அதனால் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று கூறியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது விராட் கோலி அதிகமாக சண்டையிடுவார் என்றும் கங்குலி தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்தும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : என்னோட கரியர்ல தோனி இப்படி ஒரு தப்பு செஞ்சி நான் பாத்ததே இல்ல – மனம்திறந்த அஷ்வின்

மேலும் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தத்தை எப்படி சமாளிக்கிறீர்கள் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் : எனக்கு எந்தவிதமான மன அழுத்தமும் கிடையாது. அப்படி மன அழுத்தத்தை கொடுப்பவர்கள் என்றால் அது எனது மனைவியும், காதலியும் தான் என்று கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement