என்னோட கரியர்ல தோனி இப்படி ஒரு தப்பு செஞ்சி நான் பாத்ததே இல்ல – மனம்திறந்த அஷ்வின்

Ashwin-3
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வரும் ரவிச்சந்திரன் அஷ்வின் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் அனுபவம் உடையவர். நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கூட சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அஷ்வின் தற்போது தென் ஆப்பிரிக்க தொடரிலும் அசத்தி காத்திருக்கிறார். இந்நிலையில் அவரது அனுபவத்தில் இந்திய அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்வி அவருக்கு எதிராக எழுப்பப்பட்டது.

ashwin 1

- Advertisement -

குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு எதிராக எந்த விக்கெட் கீப்பர் சிறப்பாக செயல்படுவார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அஷ்வின் கூறுகையில் : இந்திய அணியின் விக்கெட் கீப்பர்கள் பொதுவாக அனைவருமே ஸ்பின்னருக்கு எதிராக சிறப்பாக செயல்படுவார்கள். குறிப்பாக தினேஷ் கார்த்திக், சாகா, தோனி ஆகிய மூவருமே ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக கீப்பிங் செய்பவர்கள்தான் என்று கூறினார்.

இருப்பினும் இதில் யாராவது ஒருவரை தேர்வு செய்தாக வேண்டும் என்றால் அது மிகவும் கடினம் தான். என்னைப் பொறுத்தவரை இந்த மூவரில் தோனிதான் சிறந்த விக்கெட் கீப்பர். ஏனெனில் தோனியின் விக்கெட் கீப்பிங் ஸ்டம்புக்கு பின்னால் மற்ற வீரர்களை விட வேகமாக இருக்கும். அதனை நான் கண்கூடாக பார்த்து உள்ளேன்.

ashwin

தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்காக விளையாடும் போது தினேஷ் கார்த்திக் உடனும், டெஸ்ட் போட்டிகளில் சாஹாவுடனும் நிறைய விளையாடி இருக்கிறேன். ஆனால் அவர்கள் இருவரை விட தோனியின் வேகம் அதிகம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஒருமுறை சென்னை டெஸ்ட் போட்டியின்போது எட் கோவன்ஸை தோனி ஸ்டம்பிங் செய்திருப்பார். அந்த பந்து டர்ன் ஆகவில்லை என்றாலும் அதிகளவு பவுன்ஸ் ஆகி சென்றது. ஆனாலும் அதை சரியாக பிடித்து ஸ்டம்பிங் செய்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : தெ.ஆ ஒருநாள் தொடரில் இவருக்கு வாய்ப்பு கொடுத்தே ஆகவேண்டும் – ஆகாஷ் சோப்ரா சப்போர்ட்

அந்த அளவிற்கு அவர் சரியாகப் பந்தை பார்க்கக் கூடியவர். மேலும் என்னுடைய கிரிக்கெட் கரியரில் தோனி ஸ்டம்ப்பிங்கோ அல்லது ரன் அவுட்டோ அல்லது கேட்ச்சோ எளிதில் விட்டு நான் பார்த்தது கிடையாது. கீப்பிங்கில் அவரிடம் தவிறினை பார்ப்பது மிகவும் கடினம். என்னை பொறுத்தவரை மிகச் சிறப்பான விக்கெட் கீப்பர் என்றால் அது தோனிதான் என்று அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement