உங்களால் முடியலனா ரோஹித்திடமே விட்டுடுங்க. விராட் கோலியிடம் கறாராக பேசிய – சவுரவ் கங்குலி

Ganguly
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12-சுற்றோடு வெளியேறிய இந்திய அணியானது அடுத்ததாக இந்தியாவில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளதால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் புதிய கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார்.

Rohith

- Advertisement -

அவரது தலைமையின் கீழ் 16 பேர் கொண்ட அணியும் அறிவிக்கப்பட்டது. அதில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த டி20 தொடர் முடிந்து விளையாடவுள்ள டெஸ்ட் தொடரிலும் இந்திய சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த நியூசிலாந்து அணிக்கெதிரான தொடருக்குப் பின்னர் அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அடுத்தடுத்து பல தொடர்களில் பங்கேற்க உள்ளது. இப்படி அடுத்தடுத்து போட்டிகள் நடைபெற இருப்பதால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம் பிசிசிஐ தலைவர் கங்குலி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிகிறது. அந்த பேச்சுவார்த்தையில் ஒருநாள் கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்தும் கோலியை பதவி விலக கங்குலி கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

Ganguly

டி20 போட்டிகளை தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டிலும் கோலி அழுத்தத்தை சந்திப்பதால் அந்த பதவியில் இருந்தும் விலகி விடுமாறும், ரோகித் சர்மா டி20 மற்றும் ஒருநாள் அணிக்கு கேப்டனாக இருக்கட்டும். நீங்கள் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருங்கள் என்று கங்குலி நேரடியாக கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் ஏற்கனவே தொடர்ச்சியான கிரிக்கெட் விளையாடி வருவதால் அழுத்தத்தை சந்தித்துள்ள கோலி பணிச்சுமை காரணமாகவே டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : இதை நான் நெனச்சிகூட பாக்கல. பாகிஸ்தான் அணியை ஒரே ஆளா சாச்சிட்டாரு – ஆரோன் பின்ச் மகிழ்ச்சி

இந்நிலையில் டி20 போட்டிகளை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலும் விராட் கோலியை கங்குலி பதவி விலக கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோலி பதவி விலகினால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரோகித் சர்மாவும், டெஸ்ட் போட்டியில் விராட் கோலியும் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார்கள் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement