இதை நான் நெனச்சிகூட பாக்கல. பாகிஸ்தான் அணியை ஒரே ஆளா சாச்சிட்டாரு – ஆரோன் பின்ச் மகிழ்ச்சி

Finch
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பு டி20 உலக கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய வேளையில் நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் முக்கியமான 2-வது அரையிறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி அல்லது 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை குவித்தது.

wade 2

- Advertisement -

அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் குவித்து அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியுடன் விளையாட உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த சிறப்பான வெற்றிக்கு பிறகு பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் கூறுகையில் : இந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இந்த போட்டி ஒரு அருமையான போட்டியாக அமைந்தது. மேத்யூ வேட் இறுதிவரை களத்தில் நின்று அற்புதமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

wade 1

ஸ்டோய்னிஸ்னுடன் அவர் அமைத்த பார்ட்னர்ஷிப் மிகவும் இக்கட்டான நேரத்தில் வந்த அருமையான பாட்னர்ஷிப். இந்த போட்டியில் மேத்யூ வேட் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் எங்களுக்கு வெற்றியை தேடித்தந்துள்ளார். இன்றைய போட்டியில் எங்களது பீல்டிங் சற்று சுமாராகவே இருந்தது. இருப்பினும் நாங்கள் இரண்டாவது இன்னிங்சின் போது சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுவிட்டோம்.

- Advertisement -

இதையும் படிங்க : கைக்கு வந்த வாய்ப்பை தவறவிட்டு நாங்கள் தோற்க இவரே காரணம் – கேப்டன் பாபர் அசாம் வருத்தம்

இந்த துபாய் மைதானத்தில் இரண்டாவதாக சேசிங் செய்யும் அணிகள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளன. இன்றைய போட்டியிலும் அதுவே நடைபெற்றுள்ளது. மைதானத்தில் எதிர்பார்த்த அளவு டியூ இல்லை ஆனால் மைதானம் வெளிச்சம் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை நாங்கள் டாசில் தோற்று இருந்தாலும் ஃபர்ஸ்ட் பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவித்து இருப்போம் என்றும் பின்ச் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement