கைக்கு வந்த வாய்ப்பை தவறவிட்டு நாங்கள் தோற்க இவரே காரணம் – கேப்டன் பாபர் அசாம் வருத்தம்

Azam
- Advertisement -

நடப்பு டி20 உலக கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய வேளையில் நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் முக்கியமான 2-வது அரையிறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி அல்லது 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை குவித்தது.

wade

- Advertisement -

அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் குவித்து அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியுடன் விளையாட உள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் கூறுகையில் : நாங்கள் முதல் இன்னிங்சின் போது பெரிய ரன்களை குவிக்க நினைத்தோம். அதன்படி இந்த போட்டியில் வெற்றி பெற தேவையான ரன்களை நாங்கள் குவித்தோம். இருப்பினும் ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிகளை இறுதிவரை விளையாட வைப்பது பெரிய மாற்றத்தை தந்தது.

hasan ali 1

அதிலும் குறிப்பாக இந்த போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது யாதெனில் ஹசன் அலி தவறவிட்ட கேட்ச் தான். அதை மட்டும் நாங்கள் சரியாக பிடித்திருந்தால் இந்த போட்டியின் முடிவு மாறி இருக்கும். இருப்பினும் இந்த தொடரில் நாங்கள் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. ஒரு கேப்டனாக நான் இந்த தொடரில் பங்கேற்றது பெருமை அளிக்கிறது. இந்த தொடரில் நாங்கள் செய்த சில தவறுகளை திருத்திக் கொண்டு இனிவரும் இது போன்ற பெரிய தொடர்களில் சிறப்பாக விளையாடுவோம்.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : கேட்சை விட்டதால் கோட்டை விட்ட பாகிஸ்தான். தோல்விக்கு காரணமான ஒரு பந்து – வைரலாகும் வீடியோ

இதுபோன்ற முக்கியமான போட்டியில் செய்யும் சின்ன சின்ன தவறுகள் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த போட்டியின் மூலம் தெரிந்து கொண்டுள்ளோம். இந்த மைதானத்தில் எங்களுக்கு கிடைத்த ஆதரவு சிறப்பாக இருந்தது என்று தோல்வி குறித்து பாபர் அசாம் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement