விராட் கோலி சொன்னது உண்மைதான். இந்திய அணி பெரிய போட்டிகளில் தோற்க இதுவே காரணம் – கம்பீர்

Gambhir
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் துவக்கம் முதலே இந்திய அணி பெரிய சரிவை சந்தித்து வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணியானது நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த இரண்டாவது லீக் போட்டியில் 20 ஓவர்களில் இந்திய அணி வெறும் 110 ரன்களை மட்டுமே குவிக்க நியூசிலாந்து அணியானது 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 15வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Williamson

- Advertisement -

இந்த நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ரசிகர்களிடையே மட்டுமின்றி முன்னாள் வீரர்கள் பலரிடமும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணி மற்றும் வீரர்கள் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பலரும் இந்திய அணி தோற்றதற்கு பல்வேறு காரணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் இந்திய அணி தோற்றது குறித்து முக்கியமான கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஒரு போட்டியில் வெற்றி பெற வேண்டுமெனில் திறமை முக்கியம்தான்.

Ind

இந்திய அணியிடம் திறமை இருந்தும் இந்த முக்கியமான வாழ்வா ? சாவா ? போட்டியில் இந்திய அணி தோற்றதற்கு மன வலிமை இல்லாதது தான் காரணம் என்று நினைக்கிறேன். ஏனெனில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியை இந்திய அணி அணுகியதால் தவறு செய்யக்கூடாது, தவறு செய்யக்கூடாது என்று நினைத்து அந்த தவறை செய்து விட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : எனக்காக பெரிய ரிஸ்க் எடுக்க வேண்டாம். தோனியிடம் இருந்து பறந்த மெசேஜ் – முக்கிய முடிவை எடுக்கப்போகும் சி.எஸ்.கே

இன்னும் சொல்லப்போனால் இந்திய அணிக்கு அந்த போட்டியை எதிர்கொள்ளும் அளவிற்கு மன வலிமை இல்லை. அது இந்த போட்டியின் மூலம் தெரியவந்துள்ளது. இதில் சந்தேகம் எதுவும் கிடையாது. இந்திய அணி பயந்து பயந்து விளையாடியது தான் இந்த தோல்விக்கு காரணம் என கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement