எனக்காக பெரிய ரிஸ்க் எடுக்க வேண்டாம். தோனியிடம் இருந்து பறந்த மெசேஜ் – முக்கிய முடிவை எடுக்கப்போகும் சி.எஸ்.கே

Dhoni-1
Dhoni Captain

கடந்த 2020-ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணியானது பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியது. அதனைத் தொடர்ந்து அந்த தொடரின் இறுதியில் அடுத்த ஆண்டு நிச்சயம் நான் விளையாடுவேன் என்றும் நிச்சயம் சிஎஸ்கே அணி வலுவாக திரும்பும் என்றும் தோனி கூறியிருந்தார். அவர் கூறிய வார்த்தைக்கு ஏற்ப நடைபெற்று முடிந்த 14-வது ஐபிஎல் தொடரில் தொடக்கம் முதலே புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த சிஎஸ்கே அணியானது பிளே ஆப் சுற்றை முதல் அணியாக உறுதி செய்தது,.

Dhoni-3

அதுமட்டுமின்றி டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. பின்னர் இறுதியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி நான்காவது முறையாக ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இரண்டு அணிகள் புதிதாக இணைய உள்ளதால் வீரர்கள் அனைவரும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்திருந்தது.

- Advertisement -

மேலும் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து அணிகளும் தற்போது தங்களது அணியில் உள்ள சிறப்பான நான்கு வீரர்களை தக்க வைக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது. அந்தவகையில் சிஎஸ்கே அணியானது துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், டூபிளெஸ்ஸிஸ் மற்றும் கேப்டன் தோனி, ஆல் ரவுண்டர் ஜடேஜா ஆகிய நால்வரை தக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் அணியின் கேப்டன் தோனியிடமிருந்து சிஎஸ்கே நிர்வாகத்திற்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு மெசேஜ் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

CSK-2

அதன்படி இந்த ஐபிஎல் தொடரில் தான் தக்க வைக்கப்பட்டால் 16 கோடி ரூபாய் ஊதியம் கொடுக்க வேண்டும் என்பதனால் பெரிய தொகை வீணாவதை சுட்டிக்காட்டி இந்த தொடரில் தன்னை தக்க வைக்க வேண்டாம் என தோனி அனுப்பிய மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது. தோனி சிஎஸ்கே நிர்வாகத்திற்கு அனுப்பிய அந்த மெசேஜில் குறிப்பிடப்பட்டதாவது : என்னை தக்க வைக்க பெரிய தொகையை செலவு செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : இனி என்ன பண்ணாலும் இந்திய அணியால் இதை செய்ய முடியாது. எல்லாம் போய் வேலைய பாருங்க – சேவாக் அதிரடி

ஆனாலும் தோனி நிச்சயம் தக்க வைக்கப்படுவார் என்றே தெரிகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் ஐபிஎல் கோப்பையை சென்னையில் வைத்து பூஜை நடத்திய சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன் கூறுகையில் : தோனியில்லாமல் நிச்சயம் சிஎஸ்கே அணி இருக்காது. எனவே தோனி தக்க வைக்கப்படுவார் என்று கூறியதால் நிச்சயம் தோனி அணியின் முதல் நபராக தக்கவைக்கபடவே அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement