- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணியின் பயிற்சியாளராக வந்ததுக்கு காரணம் என்ன? விராட் கோலியின் கேள்விக்கு பதிலளித்த கவுதம் கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துவக்க வீரராக இருந்த கம்பீர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஐபிஎல் தொடர்களில் மென்டராகவும், பயிற்சியாளராகவும் பதவி வகித்து வந்தார். அந்த வகையில் லக்னோ அணியின் அறிமுக சீசனிலேயே மென்டராக இருந்த அவர் அந்த அணியை பிளே ஆப் சுற்று வரை அழைத்து வந்தார். அதனை தொடர்ந்து இந்த ஆண்டு கொல்கத்தா அணியானது கோப்பை வெல்லும் போதும் அவர் அந்த அணியின் மென்டராக செயல்பட்டிருந்தார்.

பயிற்சியாளராக பதவி ஏற்றது ஏன்? :

இப்படி அவரது சிறப்பான செயல்பாடுகள் காரணமாக மகிழ்ச்சி அடைந்த இந்திய அணி ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பதவியில் இருந்து வெளியேறிய போது அவரை புதிய பயிற்சியாளராக நியமித்தது. அதன்படி பொறுப்பேற்ற கம்பீர் நடைபெற்று முடிந்த இலங்கை தொடரில் முதல் முறையாக இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார்.

- Advertisement -

அந்த சுற்றுப்பயணத்தில் டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தது. இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தற்போது கம்பீர் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணி நட்சத்திர வீரரான விராட் கோலியுடன் உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அந்த உரையாடல் நிகழ்ச்சியில் கம்பீர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் விராட் கோலி கம்பீரிடம் நீங்கள் ஏன் புதிய பயிற்சியாளராக பதவி ஏற்றீர்கள்? பயிற்சியாளர் பதவி குறித்த உங்களது கருத்து என்ன? என்று கேள்வியை எழுப்பினார். இதற்கு பதிலளித்த கம்பீர் கூறுகையில் : எனக்கு எப்பொழுதுமே சவால் என்றால் மிகவும் பிடிக்கும். கிரிக்கெட் வீரராக இருக்கும் போது நான் பல சவால்களை கடந்து வந்துள்ளேன்.

- Advertisement -

தற்போது பயிற்சியாளராகவும் அவதாரம் எடுத்து இருக்கிறேன். விளையாடும் காலத்தில் பயிற்சியாளராக வருவேன் என்று நினைத்துவிட பார்த்தது கிடையாது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கூட நான் இதை பற்றி யோசிக்கவில்லை. ஆனால் தற்போது பயிற்சியாளராக சவாலையும் ஏற்றுக் கொண்டு என்னுடைய திறமையை வெளிப்படுத்த இந்த முடிவை நான் எடுத்துக் கொண்டேன்.

இதையும் படிங்க : டீம் மேனேஜ்மென்ட்டோட நிலைமையை யோசித்து இந்த முடிவை எடுங்க.. பி.சி.சி.ஐ க்கு வேண்டுகோள் வாய்த்த – அம்பத்தி ராயுடு

இந்திய அணி அடுத்ததாக பல ஐசிசி தொடர்களில் விளையாட உள்ளது. அதில் இந்திய அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்பதற்காகவே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன் என கம்பீர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -