இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளதால் வருடா வருடம் ஐபிஎல் போட்டிகள் சுவாரசியத்தை அதிகப்படுத்தி வருகின்றன. இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரை ஷரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கைப்பற்றி அசத்தியது.
கொஞ்சம் யோசிச்சு முடிவு எடுங்க :
அதனை தொடர்ந்து தற்போது அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வேலைகளில் தற்போது ஐபிஎல் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டுக்கு முன்னதாக இந்த ஆண்டு இறுதியில் ஐபிஎல் தொடரின் மெகா ஏலமானது நடைபெற இருக்கிறது.
அதற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம்? எத்தனை வீரர்களை மேட்ச் டூ ரைட் கார்டு மூலம் வாங்கலாம் என்பது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இதன் முடிவில் அறிவிக்கப்படும் விதிமுறைகளின் அடிப்படையில் ஒவ்வொரு அணியிலும் சில வீரர்கள் தக்கவைக்கப்பட்டு மத்த வீரர்கள் அனைவரும் மெகா ஏலத்திற்கு செல்வார்கள்.
இந்நிலையில் இப்படி நடைபெற்று வரும் சில விவாதங்களில் சில அணிகள் ஒன்று அல்லது இரண்டு மேட்ச் காட் போதும் என்று கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதெல்லாம் போதாது என சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :
ஐபிஎல் தொடரில் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களின் எண்ணிக்கையை பி.சி.சி.ஐ அதிகப்படுத்த வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு அணியும் பல வீரர்களின் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் மீது கோடிக்கணக்கில் முதலீடு செய்து வளர்த்து வருகின்றனர். ஒரு அணியை கட்டமைக்க ஐபிஎல் அணிகள் படாதபாடு பட்டு வருகின்றன. இந்த சூழலில் மெகா ஏலம் நடத்துவதால் அந்த அணியில் உள்ள கலவை மாறிவிடும்.
இதையும் படிங்க : உங்களால் தான் இந்தியா அங்க ஜெய்க்குது.. அதுக்கான பாராட்டு விராட் கோலியை சேரும்.. நேராக பாராட்டிய கம்பீர்
எனவே இந்த சூழலை தவிர்ப்பதற்காக தக்கவைக்கும் வீரர்களை அதிகரித்தால் அந்த அணி தங்களுக்கு தேவையான வீரர்களை சரியாக கட்டமைத்து எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக செயல்படும். எனவே இந்த வாய்ப்பை அதிகரித்து தரவேண்டும் என அம்பத்தி ராயுடு கூறியுள்ளார்.



