கிறிஸ் கெயிலோட பலமே இதுதான். அவரை ஏன் மாத்தி ஆடவைக்கிறீங்க – கம்பீர் ஓபன்டாக்

Gayle
- Advertisement -

ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடர் பஞ்சாப் அணிக்கு அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. தொடர் தோல்விகளால் அந்த அணியானது துவண்டுபோயிருக்கிறது. தற்போது பஞ்சாப் அணியில் விளையாடி வரும் கிறிஸ் கெயிலைப் பற்றி முன்னால் இந்திய தொடக்க ஆட்டக்காரரான கௌதம் கம்பீர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் கிறிஸ் கெயிலை குறிப்பிட்ட அவர் கூறுகையில் :

gayle 2

- Advertisement -

பஞ்சாப் அணி ஆடும் லெவனில் கிறிஸ் கெயிலுக்கு இடம் கொடுத்தால், அவரை ஓப்பனராகத்தான் களமிருக்க வேண்டும். அவரை மூன்றாவது வீரராக களமிருக்குவது அந்த அணிக்கு பெரிய பலனைத் தராது. அதுவே ஓப்பனராக கிறஸ் கெயில் களமிறக்கப்பட்டால் பவர் ப்ளே ஓவர்களில் அதிரடியாக ஆடி அணிக்கு அதிக ரன்களை குவித்து தருவார். கிறிஸ் கெயிலுக்கு பதில் டேவிட் மலானை அணியில் எடுக்க வேண்டுமென்ற கருத்து எழுந்துள்ளது.

டேவிட் மலான் ஒரு சிறந்த டி20 ஆட்டக்காரராக இருக்கலாம். ஆனால் விளையாடப்போகும் பிட்ச்சின் தன்மையைப் பொறுத்துத்தான் யார் சிறப்பாக செயல்படுவார்கள் என்று தெரியும். அப்படி பார்த்தால் கிறிஸ் கெயிலே சிறந்தவர். மேலும் கிறிஸ் கெயிலுடன் டேவிட் மலானை ஒப்பிடுவது அபத்தமான ஒன்றாகும். உலகிற்கே தெரியும் யார் சிறந்த t20 ஆட்டக்காரரென்று. மும்பை ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளமாகும்.

Gayle

பஞ்சாப் அங்கு விளையாடிய போட்டிகளில் கிறிஸ் கெயிலை ஓப்பனிங்கில் களமிறக்கியிருக்க வேண்டும். ஏனென்றால், அவர் 60 பந்துகள் சந்தித்தால், கட்டாயம் சதம் விளாசியிருப்பார். இதை கருத்தில்கொண்டு இனிவரும் போட்டிகளிலாவது பஞ்சாப் அணியானது கிறிஸ் கெயிலை ஓப்பனிங்கில் களமிறக்க வேண்டுமென்று கவுதம் கம்பீர் கூறினார்.

gayle 1

பஞ்சாப் அணிக்காக தற்போது ஓப்பனிங்கில் ஆடிவரும் ராகுலும், மயாங்க் அகர்வாலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எனவே தான் கிறிஸ் கெயிலுக்கு ஓப்பனிங்கில் இடம் கிடைக்கவில்லை என்பது நாம் அறிந்ததே. ஆனாலும் ஓப்பனிங் ஆடியபோது கிறிஸ் கெயிலின் சராசரி 40க்குமேல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐபிஎல்லில் அவர் படைத்த பல சாதனைகள், அவர் ஓப்பனிங்கில் விளையாடும்போதுதான் படைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement