ஒருநாள் போட்டிகளுக்கு அவரும், டி20க்கு இவரும் ஒப்பனரா விளையாடுனாதான் கரெக்ட்டா இருக்கும் – கம்பீர் கருத்து

Gambhir
- Advertisement -

இந்திய அணியில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது ஏகப்பட்ட வீரர்கள் வாய்ப்புக்காக வரிசையில் காத்திருக்கின்றனர். குறிப்பாக மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் தனித்தனியே ஒரு பிளேயிங் லெவனை அமைக்கும் அளவிற்கு அத்தனை திறமைசாலிகள் தொடர்ச்சியாக இந்திய அணியில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் சுழற்சி முறையில் அவர்களுக்கு தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதோடு ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி ஐசிசி கோப்பையை கைப்பற்ற முடியாததால் தற்போது ஒரு சில சீனியர் வீரர்களை மட்டும் அணியில் பேக்கப் வைத்துக்கொண்டு மற்றபடி இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Shubman Gill

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் துவக்க வீரராக தற்போது டெஸ்ட் கிரிக்கெட், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணியால் சுப்மன் கில் ஆதரிக்கப்பட்டு தொடர்ச்சியாக வாய்ப்பினை பெற்று விளையாடி வருகிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடி இருந்தாலும் டி20 போட்டிகளில் அவருடைய அணுகுமுறை பெரிய அளவில் கேள்வியை சந்தித்துள்ளது.

ஏனெனில் பொதுவாகவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அவர் டி20 கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரை 5 போட்டிகளில் விளையாடி இதுவரை 100 ரன்களை கூட அடிக்கவில்லை. அதேபோன்று இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கூட அவர் 58 ரன்கள் மட்டுமே குவித்திருந்தார். அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முதல் போட்டியில் 7 ரன்கள், இரண்டாவது போட்டியில் 11 ரன்கள் என விரைவாக ஆட்டமிழந்துள்ளார்.

prithvi shaw 1

இந்நிலையில் இந்திய அணியில் டி20 போட்டிகளில் ஓப்பனிங் செய்ய ப்ரித்வி ஷாவையும், ஒருநாள் போட்டிகளில் ஓபனிங் செய்ய சுப்மன் கில்லையும் வைத்துக்கொள்ள வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

சுப்மன் கில்லின் அணுகுமுறை 50 ஓவர் போட்டிகளுக்கு சரியானதாக இருக்கிறது. ஏனெனில் பவர்பிளே ஓவர்களில் நிதானமாக விளையாடும் அவர் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களுக்கு எதிராக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய ரன்களை குவிக்கிறார். ஆனால் டி20 போட்டியின் போது பவர்பிளே ஓவர்களிலேயே ஸ்பின்னர்கள் வந்துவிடுவதால் அவர் தடுமாற்றம் கண்டு ஆட்டமிழக்கிறார்.

இதையும் படிங்க : ஐசிசி தரவரிசையில் புதிய உச்சம் தொட்ட சூர்யகுமார், நூலிழையில் காத்திருக்கும் மெகா உலக சாதனை

ஆனால் ப்ரிதிவி ஷா அப்படி கிடையாது. துவக்கத்திலிருந்தே பவுலர்களை எதிர்த்து அதிரடியாக விளையாடும் அவர் நிச்சயம் டி20 போட்டிகளுக்கு சரியாக பொருந்துவார். எனவே டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு ப்ரித்வி ஷாவையும், ஒருநாள் கிரிக்கெட்டில் சுப்மன் கில்லையும் துவக்க வீரராக களமிறக்கினால் அது இந்திய அணிக்கு பலம் என கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement