IND vs HK : ஹார்டிக் பாண்டியாவுக்கு பதில் அவரை தான் சேத்து இருக்கனும் – ரோஹித்தை விளாசிய கம்பீர்

Gambhir
- Advertisement -

இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஏற்கனவே தங்களது முதல் ஆட்டத்தை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தியிருந்தது. அதனை தொடர்ந்து நான்காவது லீக் ஆட்டத்தில் நேற்று ஹாங்காங் அணியை எதிர்த்து விளையாடி இந்திய அணியானது 40 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்று அடுத்த சுற்று தகுதியாகி உள்ளது.

Hardik Padnday IND vs PAk

- Advertisement -

இந்நிலையில் பலம் குறைந்த இந்த ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் அசத்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டார்.

அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் நேற்றைய போட்டியில் இடம் பிடித்தார். ஆனாலும் நேற்று அவரால் பேட்டிங் செய்ய முடியவில்லை. ஏனெனில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 192 ரன்கள் குவித்தது. இறுதிவரை விராட் கோலி மற்றும் சூரியகுமார் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.

Deepak-Hooda

இதன் காரணமாக ரிஷப் பண்ட் மட்டுமின்றி தினேஷ் கார்த்திக்கும் பேட்டிங் செய்ய களமிறங்கவில்லை. இந்நிலையில் இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியாவிற்கு பதிலாக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்தது தவறான முடிவு என இந்திய அணியின் முன்னாள் வீரராக கௌதம் கம்பீர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

ஹார்டிக் பாண்டியாவிற்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் இடம் பிடித்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் ஏற்கனவே அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தினேஷ் கார்த்திக் இருக்கிறார். அதோடு ஹார்திக் பாண்டியா பந்து வீசும் ஒரு ஆல்ரவுண்டர் அவருக்கு பதிலாக நீங்கள் ஒரு வீரரை தேர்வு செய்யும்போது அவர் பந்துவீசும் திறனை கொண்டிருக்க வேண்டும்.

இதையும் படிங்க : IND vs HK : வண்டி ஐபிஎல்ல மட்டுமே ஓடும், கேரியரின் மோசமான சாதனை இன்னிங்ஸ் ஆடிய ராகுலை கலாய்க்கும் ரசிகர்கள்

அந்த வகையில் தீபக் ஹூடா தான் ஹார்டிக் பாண்டியாவிற்கு சரியான மாற்று இருக்க முடியும். ஏனெனில் தீபக் ஹூடாவால் பகுதிநேர பந்துவீச்சாளராகவும் செயல்பட முடியும். நேற்றைய போட்டியில் ரிஷப் பண்டை சேர்த்தது தவறு என்றும் தீபக் ஹூடா தான் தகுதியானவர் என்றும் கம்பீர் இந்த முடிவினை விளாசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement