அஸ்வின் – ஹர்பஜன் இருவரில் யார் நல்ல ஸ்பின்னர்? கெளதம் கம்பீரின் பதில் இதோ (இதே வேலையா போச்சி)

Gambhir
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

jadeja

- Advertisement -

இப்போட்டியில் பேட்டிங்கில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 175* ரன்கள் விளாசியதுடன் பந்துவீச்சில் 9 விக்கெட்டுக்கள் அள்ளிய ரவீந்திர ஜடேஜா இந்தியாவின் இந்த மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். முன்னதாக இந்த போட்டியில் 100வது போட்டியில் விளையாடிய 12வது இந்திய வீரர் என்ற புதிய மைல்கல்லை தொட்ட நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு சிறப்பு தொப்பி பரிசளித்து கௌரவப்படுத்தப்பட்டது.

ஹர்பஜனை தாண்டி, கபில் தேவை முந்தி:
இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங்கில் முக்கியமான 61 ரன்கள் குவித்து பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு நல்ல ஆல்-ரவுண்டராக இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். மேலும் இப்போட்டியில் 6 விக்கெட்டுகள் எடுத்த அவர் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய பந்துவீச்சாளர் என்ற ஜாம்பவான் கபில் தேவ் ஆல்டைம் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் 131 போட்டிகளில் 434 விக்கெட்டுகளை எடுத்திருந்த ஜாம்பவான் கபில்தேவ் இதுநாள் வரை அந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தார்.

kapil dev

தற்போது அவரை பின்னுக்கு தள்ளி உள்ள அஷ்வின் 85 போட்டிகளில் 436 விக்கெட்டுகள் எடுத்து 2வது இடத்தை பிடித்துள்ளார். முன்னதாக கடந்த நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அபாரமாக செயல்பட்ட அவர் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த 3-வது இந்திய பந்துவீச்சாளராக இருந்த மற்றொரு முன்னாள் நட்சத்திரம் ஹர்பஜன் சிங்கை முந்தி புதிய சாதனையை ஏற்கனவே படைத்திருந்தார். இப்படி ஒவ்வொரு ஜாம்பவான்கள் படைத்த சாதனைகளை தகர்த்து வரும் அவர் அனில் கும்ப்ளேவின் 619 விக்கெட்கள் சாதனையை உடைத்து முதலிடம் பிடித்து சரித்திரம் படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ஹர்பஜன் V அஷ்வின்:
இந்த அடுத்தடுத்த சாதனைகளின் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய ஆப் ஸ்பின் பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் ரவிச்சந்திரன் அஷ்வின் பெற்றுள்ளார். அதாவது அனில் கும்ப்ளே ஒரு லெக் ஸ்பின்னர் ஆவார். ஹர்பஜன் சிங் ஒரு ஆப் ஸ்பின்னர் ஆவார். அப்படிப்பட்ட நிலையில் ஹர்பஜன் சிங்கை முந்தியுள்ள அஸ்வின் இந்தியாவின் மகத்தான ஆப் ஸ்பின் பந்து வீச்சாளராக வரலாற்றில் தனது பெயரை இப்போதே பொன்னெழுத்துக்களால் பொறித்துள்ளார். இந்நிலையில் ஹர்பஜன் சிங் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரில் யார் தரமான ஆஃப் ஸ்பின் பந்து வீச்சாளர் என்பது பற்றி முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பதிலளித்துள்ளார்.

Gautam Gambhir On Ashwin Vs Harbajan Singh

இது பற்றி ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு பேட்ஸ்மேனாக ரவிச்சந்திரன் அஸ்வினை எதிர்கொள்வதற்கு நான் வெறுப்பேன். ஆனால் ஹர்பஜன் சிங் பந்துவீச்சை விரும்பிப் பார்ப்பேன். அதுவும் ஒரு இடது கை பேட்ஸ்மேனாக இருக்கும் என்னை ரவிச்சந்திரன் அஸ்வின் நிச்சயமாக அவுட் செய்ய முடியும். மேலும் ஒரு வல்லுனராக ஹர்பஜன் சிங்கிடம் பவுன்ஸ், தூஸ்ரா போன்ற பல்வேறு விதமான நுணுக்கங்கள் உள்ளதாக கருதுகிறேன்.

- Advertisement -

அதே சமயம் இடது கை வலது கை என எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் அவர்களை அவுட் செய்யும் அளவுக்குத் துல்லியமாக பந்து வீசுபவராக ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளார். ஏனெனில் அவர் வீசும் பந்துகளின் வேகத்தில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஹர்பஜன் சிங் வீசும் பந்துகள் பார்ப்பதற்கு மிக அழகானதாக இருக்கும்” என கூறினார்.

Ashwin

தரமான அஷ்வின்:
பொதுவாகவே இடதுகை பேட்ஸ்மேன்களை அசால்டாக அவுட் செய்வதில் வல்லவராக திகழும் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை இடது கை வீரர்களை அவுட் செய்த பந்து வீச்சாளராக ஏற்கனவே உலக சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் ஒரு இடதுகை பேட்ஸ்மேனாக இருக்கும் கௌதம் கம்பீர் அஸ்வின் பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு விரும்பவில்லை என வெளிப்படையாகவே கூறினார்.

- Advertisement -

மேலும் எந்த வகையான பேட்ஸ்மேனாக இருந்தாலும் அவர்களை அவுட் செய்யும் அளவுக்கு துல்லியமாக பந்துவீசும் நுணுக்கத்தை அஸ்வின் கற்றுள்ளார் என பாராட்டினார். தற்போது 436 விக்கெட்டுகளுடன் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்களின் பட்டியல் டாப் 10க்குள் நுழைந்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் 9வது இடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க : ரெய்னாவை வேண்டாம் என கூறிய குஜராத் டைட்டன்ஸ் வாங்கிய புதிய வீரர் யார் தெரியுமா? – வெளியான அறிவிப்பு

மேலும் ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆப் ஸ்பின் பந்து வீச்சாளராக 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ள ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கு பின் 2வது இடத்தில் அஷ்வின் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement