IPL 2023 : இவருக்கு இதே வேலையா போச்சி. மீண்டும் தோனியை வம்பிற்கு இழுத்த கம்பீர் – ரசிகர்கள் கண்டனம்

Gambhir-and-Dhoni
- Advertisement -

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் களத்திற்கு உள்ளே வீரர்கள் மோதிக் கொள்வதும், களத்திற்கு வெளியே சமூக வலைதளத்தில் உரசிக் கொள்வதும் என இந்த ஐபிஎல் தொடரானது படு அமர்க்களமாக நடைபெற்று வருகிறது. களத்தில் நடைபெறும் மோதல்களை தாண்டி சமூகவலைதளத்தின் மூலம் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொள்வது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனிக்கப்படும் விடயமாகவும் மாறி வருகிறது.

அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற லக்னோ மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த லக்னோ அணியானது தற்போது சென்னை அணியுடன் 15 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் சமநிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் மோசின் கான் ஆகிய இருவரது செயல்பாடு காரணமாகவே அந்த அணி வெற்றியை பெற்றிருந்தது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக பேட்டிங்கில் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 89 ரன்கள் அடித்து அசத்தி ஆட்டநாயகன் விருதினை வென்றார். அதேபோன்று பந்துவீச்சில் கடைசி ஓவர் வீசிய மோசின் கான் 11 ரன்களுக்குள் சுருட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டினை பெற்றிருந்தார். இப்படி இவர்கள் இருவருமே மும்பை அணியை வீழ்த்த காரணமாக இருந்த வேளையில் லக்னோ அணி பெற்ற இந்த வெற்றிக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாக அந்த அணியின் பயிற்சியாளரான கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டார்.

இந்த ட்வீட் தான் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிலும் குறிப்பாக தோனியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் கிரிக்கெட் தெரிந்த அனைவருக்குமே தோனியை சுருக்கமாக எம்.எஸ் என்று அழைப்பார்கள் என்பது நன்றாகவே தெரியும்.

- Advertisement -

ஆனால் இந்த மும்பை அணிக்கு எதிரான போட்டி நடைபெற்று முடிந்த பின் வெற்றிக்கு காரணமாக இருந்த மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் மோசின் கான் ஆகியோரின் பெயரை குறிப்பிடுவதற்கு முன்னதாக “தி டூ எம்.எஸ்” என அவர் பதிவிட்டுள்ள அந்த ட்வீட் தோனியை மறைமுகமாக சீண்டும் விதமாக இருப்பதைக் கண்டு ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க : PBKS vs DC : வெறியுடன் போராடிய லிவிங்ஸ்டன், பஞ்சாப் கனவை சிதைத்து – சிஎஸ்கே’வை குறி வைத்துள்ள டெல்லி

அதோடு தோனியை சீண்டுவதிலும், அவரை வம்பு இழுப்பதுமே உங்களுக்கு வேலையாக இருக்கிறதா? என்பது போன்று கம்பீர் மீது ரசிகர்கள் தங்களது காட்டமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். மேலும் தோனியை இதுபோன்று வம்பிற்கு இழுப்பது இது முதல் முறை கிடையாது என்றும் தோனியை வம்பிற்கு இழுக்கவில்லை என்றால் கம்பீருக்கு தூக்கமே வராது என்றும் ரசிகர்கள் காட்டமாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement