PBKS vs DC : வெறியுடன் போராடிய லிவிங்ஸ்டன், பஞ்சாப் கனவை சிதைத்து – சிஎஸ்கே’வை குறி வைத்துள்ள டெல்லி

Liam Livingston PBKS vs DC
Advertisement

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 17ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அழகான தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற 64வது லீக் போட்டியில் ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறிய டெல்லியை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல நிச்சயம் தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப் எதிர்கொண்டது. அந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய டெல்லிக்கு நீண்ட நாட்கள் கழித்து தொடக்க வீரராக விளையாடிய பிரித்திவி ஷா உடன் இணைந்து அதிரடியாக 94 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த கேப்டன் டேவிட் வார்னர் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 46 (31) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அந்த நிலைமையில் வந்த ரிலீ ரோசவ் உடன் ஜோடி சேர்ந்த பிரித்திவி ஷா 2வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நீண்ட நாட்கள் கழித்து 7 பவுண்டரி 1 சிக்சருடன் அரை சதமடித்து 54 (38) ரன்கள் விளாசி அவுட்டானார். ஆனால் மறுபுறம் நேரம் செல்ல செல்ல பஞ்சாப் பவுலர்களைப் பந்தாடிய ரிலீ ரோசவ் டெத் ஓவர்களில் சரமாரியாக வெளுத்து வாங்கி 6 பவுண்டரி 6 சிக்சருடன் 82* (37) ரன்கள் குவித்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

அவருடன் பில் சால்ட் தனது பங்கிற்கு 2 பவுண்டரி 2 சிக்சருடன் 26* (14) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் டெல்லி 213/2 ரன்கள் எடுக்க பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக சாம் கரண் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து 214 ரன்களை துரத்திய பஞ்சாப்புக்கு ஆரம்பத்திலேயே கேப்டன் ஷிகர் தவான் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய அதர்வா டைட் உடன் கை கோர்த்த மற்றொரு தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சர்வை சரி செய்தாலும் மெதுவாகவே விளையாடி 4 பவுண்டரியுடன் 22 (19) ரன்களில் ஆட்டமிழந்து பின்னடைவை கொடுத்தார்.

இருப்பினும் அடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்து பஞ்சாப்பின் வெற்றிக்கு போராட்ட துவங்கினார். ஆனாலும் மறுபுறம் 15 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 3வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் பார்மசிப் அமைத்து சற்று மெதுவாகவே விளையாடிய அதர்வா டைட் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 55 (42) ரன்கள் எடுத்து பின்னடைவை கொடுத்ததால் பஞ்சாப் அணியின் கோரிக்கையின் படி ரிட்டயர்ட் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

அப்போது கடைசி 5 ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 86 ரன்கள் தேவைப்பட்டபோது அடுத்ததாக வந்த ஜிதேஷ் சர்மா 0, தமிழக வீரர் சாருக்கான் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தனர். அந்த நிலைமையில் மறுபுறம் லிவிங்ஸ்டன் அதிரடியாக செயல்பட்டு வெற்றிக்கு போராடிய போதிலும் எதிர்ப்புறம் வந்த சாம் கரண் தலா 1 பவுண்டரி சிக்சரை பறக்க விட்டு அச்சுறுத்தலை கொடுத்த போது 11 (5) ரன்களில் அவுட்டாக்கிய ஆன்றிச் நோர்ட்ஜெ அடுத்து வந்த ஹர்ப்ரீத் ப்ராரை டக் அவுட்டாக்கி மிரட்டினார்.

அதனால் பரபரப்பு ஏற்பட்ட அந்த போட்டியில் கடைசி ஓவரில் பஞ்சாப்பின் வெற்றிக்கு 33 அசாத்தியமான ரன்கள் தேவைப்பட்ட போது இசாந்த் சர்மாவை எதிர்கொண்ட லியாம் லிவிங்ஸ்டன் 2 சிக்ஸர் 1 பவுண்டரி அடித்து கடைசி பந்தில் 94 (48) ரன்கள் குவித்து போராடி ஆட்டமிழந்தார். அதனால் பஞ்சாப்பை 20 ஓவர்களில் 198/8 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற டெல்லி சார்பில் அதிகபட்சமாக இசாந்த் சர்மா மற்றும் அன்றிச் நோர்ட்ஜெ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

இப்போட்டியில் தவான் டக் அவுட்டாகி பிரப்சிம்ரன், அதர்வா ஆகியோர் மெதுவாக விளையாடியதால் ஏற்பட்ட அழுத்தத்தில் மிடில் ஓவர்களில் லியம் லிவிங்ஸ்டன் போராடியும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் பரிதாபமாக தோற்ற பஞ்சாப் 13 போட்டிகளில் 7வது தோல்வியை பதிவு செய்தது சென்னை, மும்பை போன்ற அணிகளுக்கு சாதகமாக மாறியுள்ளது.

இதையும் படிங்க:IPL 2023 : ஓவர் கான்ஃபிடென்ட்ஸ் எதுக்கு? – 5 வாரத்துக்கு முன்பே மும்பையின் வெற்றியை முடித்த ஆஸி வீரர்களை கலாய்க்கும் ரசிகர்கள்

இந்த தோல்வியால் தன்னுடைய கடைசி போட்டியில் வென்றாலும் பஞ்சாப் 90% பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பில்லை. மறுபுறம் ஏற்கனவே முதல் அணியாக வெளியேறிய டெல்லி 5வது வெற்றியை பதிவு செய்து நீண்ட காலமாக பிடித்து வந்த கடைசி இடத்தில் இருந்து 9வது இடத்திற்கு முன்னேறியது. அத்துடன் பஞ்சாப் பிளே ஆஃப் சுற்று கனவை சிதைத்த டெல்லி அடுத்ததாக தன்னுடைய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் காத்திருக்கும் சென்னைக்கு இந்த வெற்றியால் எச்சரிக்கையும் கொடுத்துள்ளது.

Advertisement