தோனி கேப்டனா இருந்தா இதை பண்ணியிருக்க மாட்டாரு. கோலி செய்த தவறை சுட்டிக்காட்டிய – கம்பீர்

Gambhir
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரின் முதல் 2 போட்டிகளிலும் மோசமான தோல்வியை சந்தித்ததால் பல்வேறு விமர்சனங்களை எதிர் கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கேப்டன் விராத் கோலியின் யுத்திகளை பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீரும் கோலியின் கேப்டன்சி தவறுகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

indvsnz

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : நியூசிலாந்து அணியின் பவுலர்கள் அந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசினார்கள் என்று கூறுவதை விட இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது தான் நியூசிலாந்து பவுலர்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த காரணம் என்று கூறலாம்.

கோலி எப்போதுமே களத்தில் சரியான வியூகங்களை கட்டமைத்து நான் பார்த்ததே கிடையாது, மீண்டும் இம்முறையும் அதே தவறை செய்துள்ளார். அவர் வகுத்த வியூகங்கள் எதுவும் அணிக்கு பலன் கொடுக்கவில்லை. ஆனால் தோனி அப்படி செய்ய மாட்டார் நான் அவரின் கீழ் விளையாடி உள்ள ஒரு வீரராக அவரை பார்த்ததிலிருந்து சொல்கிறேன்.

Williamson

தோனி அடிக்கடி அணியை இப்படி மாற்ற மாட்டார். அதுமட்டுமின்றி முக்கியமான போட்டிகளில் கூட பெரிய அளவில் வியூகங்களை வகுக்க மாட்டார். மேலும் விராட் கோலி போன்ற ஒரு கேப்டன் ஒரே போட்டியில் எப்படி இத்தனை மாற்றங்களை செய்யலாம் என்றும் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : INDvsAFG : இந்திய அணியில் 2 மாற்றத்தை செய்த விராட் கோலி – அப்பாடா ஒருவழியா அணியில் இடம்பெற்ற வீரர்

நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் கோலியின் கேப்டன்சி பெரிதளவு விமர்சிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் அசத்தாலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

Advertisement