INDvsAFG : இந்திய அணியில் 2 மாற்றத்தை செய்த விராட் கோலி – அப்பாடா ஒருவழியா அணியில் இடம்பெற்ற வீரர்

Kohli
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் t20 உலகக்கோப்பை தொடரானது இந்திய அணிக்கு மோசமான தொடராக அமைந்து வருகிறது. ஏனெனில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி தோல்வியை தழுவியது. அதனைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது முக்கியமான லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது.

indvsafg

- Advertisement -

கடந்த போட்டியில் சில மாற்றங்களை செய்து கோலி சொதப்பியதால் இந்திய அணி தோல்வியை சந்தித்த பட்சத்தில் இன்றைய போட்டியில் மீண்டும் அணியை சரியாக கட்டமைக்க வேண்டும் என்று பலரும் கூறிவந்த நிலையில் இன்றைய போட்டிக்கான அணியில் இரண்டு முக்கிய மாற்றங்களை கேப்டன் கோலி செய்துள்ளார். அதன்படி இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் முகமது நபி பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.

பின்னர் இந்திய அணியில் உள்ள மாற்றங்கள் குறித்து பேசிய கோலி வருண் சக்ரவர்த்திக்கு பதிலாக தமிழக வீரர் அஷ்வினும், இஷான் கிஷனுக்கு பதிலாக மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் விளையாடுவார்கள் என்று அறிவித்தார். ஏற்கனவே அஷ்வின் இந்த தொடரில் இடம் பெற்றிருந்தும் ஒரு போட்டியில் கூட விளையாடாதது பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இன்று கிட்டத்தட்ட 1500 நாட்களுக்கு பிறகு இந்திய அணிக்காக டி20 போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வின் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ashwin

இன்றைய போட்டியில் இந்திய அணி பெரிய ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தினால் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

1) ரோஹித் சர்மா, 2) கே.எல்.ராகுல், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) ரிஷப் பண்ட், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) அஷ்வின், 9) ஷர்துல் தாகூர், 10) முகமது ஷமி, 11) பும்ரா

Advertisement