- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரிஷப் பண்ட்டினை தொடர்ந்து கார் விபத்தில் சிக்கிய பிரபல இந்திய வீரர் – அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பிய சம்பவம்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கினார். அவரது கார் சாலையின் நடுவே உள்ள டிவைடரில் கட்டுப்பாடு இன்றி மோத சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் அருகில் இருந்த பொதுமக்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன் பிறகு அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக ஓய்வில் இருந்து வருகிறார்.

இப்படி ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கிய அந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரவீன் குமார் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்கள் மத்தியில் அதிகளவு பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

- Advertisement -

இந்திய அணிக்காக கடந்த 2007-ஆம் ஆண்டு அறிமுகமான பிரவீன்குமார் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகள், 68 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதுதவிர்த்து ஐபிஎல் தொடரில் 119 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தவர்.

கடந்த 2020-ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த அவர் தற்போது ரியல் எஸ்டேட் மற்றும் உணவகம் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் உத்தர பிரதேசம் மாநிலத்தில் வசித்து வரும் அவர் தனது மகனை ட்ராப் செய்வதற்காக மீரட் வரை சென்றிருந்தார்.

- Advertisement -

அப்படி சென்றுகொண்டிருந்த பிரவீன் குமார் காரின் மீது ஒரு ட்ரக் மோதியது. இருந்தாலும் இந்த பயங்கர விபத்தில் பெரிய காயங்கள் இன்றி பிரவீன் குமார் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் நூலிழையில் உயிர் தப்பினர். இதுகுறித்து பேசிய பிரவீன் குமார் கூறுகையில் : கடவுளின் அருளால் மட்டுமே தற்போது நான் நன்றாக இருக்கிறேன். எனது மகனை இறக்கி விட வேண்டும் என்று சென்றுகொண்டிருந்த வேளையில் இரவு 9 மணி அளவில் எங்கள் காரை பின்னால் ஒரு வாகனம் வேகமாக மோதியது.

இதையும் படிங்க : Ashes 2023 : ஜாம்பவான்லாம் அப்றம் தான் – மானத்தை காக்க நட்சத்திர வீரரை அதிரடியாக கழற்றி விட்ட இங்கிலாந்து செய்த 3 மாற்றங்கள்

ஆனாலும் நாங்கள் சென்றது பெரிய கார் என்பதனால் எந்த வித காயமும் எங்களுக்கு ஏற்படாமல் போனது, இல்லையெனில் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம். கடவுளின் அருளால் இன்று நாங்கள் நலமுடன் இருக்கிறோம் என்று பிரவீன் குமார் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by