பேசாம பும்ராவ மறந்துட்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அவருக்கு சான்ஸ் கொடுங்க – மதன் லால் கோரிக்கை

Madan Lal
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 3வது போட்டியில் தோற்றதால் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற அகமதாபாத் நகரில் நடைபெறும் கடைசிப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் காயமடைந்து வெளியேறியது 2022 ஆசிய கோப்பையில் தோல்வி கொடுத்தது.

Jasprith Bumrah India

- Advertisement -

அதனால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்பதற்காக இந்திய அணி நிர்வாகம் அவசரப்படுத்தியதால் முழுமையாக குணமடையாமல் வந்த அவர் மீண்டும் கடைசி நேரத்தில் காயமடைந்து வெளியேறியது உலக கோப்பையிலும் இந்தியாவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அந்த நிலையில் முழுமையாக குணமடைந்து விட்டதால் ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்ட பும்ரா அவசரமாக களமிறங்கி மீண்டும் காயமடையக் கூடாது என்பதற்காக விலகுவதாக அடுத்த நாளே அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலிருந்தும் வெளியேறிய அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்ற செய்திகள் வெளியானது.

மதன் லால் கோரிக்கை:
அதனால் 2019 – 2021 வரை இந்தியாவுக்காக 30% டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் அதே காலகட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 99% போட்டிகளில் விளையாடியதால் இவர் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடுவார் என்று ரசிகர்கள் விமர்சித்தனர். ஆனால் காயம் முழுமையாக குணமடையாததால் 2023 ஐபிஎல் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலிலும் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பும்ரா நேரடியாக 2023 உலக கோப்பையில் களமிறங்குவார் என்று புதிய செய்திகள் வெளியாகியுள்ளது.

அதனால் அவருக்காக காத்திருந்து காத்திருந்து ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ள நிலையில் பும்ரா முழுமையாக குணமடைந்து வருவதற்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் கூட ஆகலாம் என்று முன்னாள் வீரர் மதன் லால் கூறியுள்ளார். அதனால் லண்டன் ஓவலில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் அவரது இடத்தில் உமேஷ் யாதவ் விளையாட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இந்திய அணி நிர்வாகம் உமேஷ் யாதவை எடுத்துக் கொள்ளலாம். லண்டனில் உங்களுக்கு குறைந்தது 3 வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை. அங்கே ஒரு ஸ்பின்னருடன் எஞ்சிய பவுலர்கள் வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள்”

- Advertisement -

“தற்சமயத்தில் பும்ராவை மறந்து விடுங்கள். அவரை எந்த கணக்கிலும் எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர் திரும்பும் போது அவருக்கான இடத்தை பற்றி பார்த்துக் கொள்ளலாம். அந்த இடத்தில் உங்களிடம் இருப்பவர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்திய அணியில் யாருக்கான இடத்திற்கு கேரண்டி உள்ளது? அவர் எப்போது வருவார் என்பது நமக்கு தெரியாது. குறைந்தது ஒரு வருடம் முதல் ஒன்றரை வருடம் ஆகலாம். போதாகுறைக்கு அவர் நீண்ட காலமாக விளையாடாமல் இருக்கிறார். அப்படியானால் அவருக்கு மிகப்பெரிய காயம் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்”

Madan-Lal

“ஏனெனில் பொதுவாக பெரும்பாலான காயங்கள் 3 மாதங்களில் குணமடைந்து விடும். ஹர்திக் பாண்டியா கூட அறுவை சிகிச்சைக்கு பின் 4 மாதங்களில் திரும்பி விட்டார். ஆனால் இங்கே பும்ரா 6 மாதங்களாக விளையாடாமலேயே இருக்கிறார். எனவே பும்ரா நிச்சயமாக அங்கு விளையாடுவார் என்று எதை வைத்து நம்மால் எதிர்பார்க்க முடியும்? அவர் திரும்புவதற்கு நீண்ட காலம் ஆகலாம். நீங்கள் பழைய பும்ராவை பார்க்க விரும்பினால் அதற்கு தேவையான நேரங்களை வழங்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:திறமை இருக்கு அதனால புகழ்ந்து பேசுறேன் இதுல என்ன தப்பு? இந்திய வீரரை ஓப்பனாக பாராட்டும் சோயப் அக்தர்

அவர் கூறுவது போல இந்தூரில் தாறுமாறாக சுழன்ற பிட்ச்சிலும் கூட அற்புதமாக ஸ்விங் செய்து 3 விக்கெட்டுகளை எடுத்த உமேஷ் யாதவ் இங்கிலாந்து போன்ற சூழ்நிலைகளில் ஸ்விங் செய்து சிறப்பாக பந்து வீசும் வேகத்தை பெற்றுள்ளார். அதே போல் கடைசி நேரத்தில் அதிரடியாக வெற்றியை தீர்மானிக்கக் கூடிய கணிசமான ரன்களை குவிக்கும் திறமையும் பெற்றுள்ள அவர் பும்ரா இடத்தில் விளையாட தகுதியானவர் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement