திறமை இருக்கு அதனால புகழ்ந்து பேசுறேன் இதுல என்ன தப்பு? இந்திய வீரரை ஓப்பனாக பாராட்டும் சோயப் அக்தர்

Shoaib Akhtar
- Advertisement -

டெல்லியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி 2008 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக இந்தியாவுக்கு வென்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் தடுமாறினாலும் நாளடைவில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். குறிப்பாக உலகின் அனைத்து பகுதிகளிலும் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு 3 வகையான கிரிக்கெட்டிலும் கிட்டத்தட்ட 50+ என்ற பேட்டிங் சராசரியில் 25000+ ரன்களை குவித்து 74 சதங்களை அடித்துள்ள அவர் நிறைய மறக்க முடியாத வெற்றிகளை இந்தியாவிற்கு பரிசாகியுள்ளார். அந்த வகையில் நவீன கிரிக்கெட்டில் ஜாம்பவானாக போற்றும் அளவுக்கு 34 வயதிலேயே ஏராளமான சாதனைகளை படைத்து வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவரை கிங் கோலி என்று ரசிகர்களும் வல்லுனர்களும் பாராட்டுகிறார்கள்.

virat kohli 166

- Advertisement -

இருப்பினும் பேட்டிங்கு சாதகமான அடிப்படை விதிமுறைகளை கொண்ட இந்த நவீன கிரிக்கெட்டில் தரமற்ற பவுலிங்கை கொண்ட எதிரணிகளை அடித்து விராட் கோலி இந்த சாதனைகளை படைப்பதாக சிலர் கூறுவார்கள். ஆனால் அதே நவீன கிரிக்கெட்டில் அதே பவுலர்களை எதிர்கொண்டு உலகின் மற்ற பேட்ஸ்மேன்களால் ஏன் இவ்வளவு ரன்களையும் சாதனைகளையும் அடிக்க முடிவதில்லை என்பதே அவர்களுடைய அனைத்து விமர்சனங்களுக்கான பதிலாகும். அந்த வகையில் திறமை வாய்ந்த விராட் கோலியை பாகிஸ்தானை சேர்ந்த சில முன்னாள் வீரர்கள் பாராட்டுவது வழக்கமாகும்.

புகழ்வதில் தப்பில்லை:
குறிப்பாக 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்று உலகமே விமர்சித்த காலங்களிலும் நிச்சயமாக விராட் கோலி ஃபார்முக்கு திரும்பி சச்சினின் 100 சதங்கள் சாதனையை தகர்த்து 110 சதங்கள் விளாசுவார் என்று பாராட்டி வந்த சோயப் அக்தர் இப்போதும் அதையே தெரிவித்துள்ளார். இதற்காக நிறைய பேர் நீங்கள் விராட் கோலியை வேண்டுமென்றே அதிகமாக பாராட்டுவதாக தம்மிடம் கூறுவதாக தெரிவிக்கும் சோயப் அக்தர் இந்தியாவை சதமடித்து வெற்றி பெற வைப்பவரை பாராட்டுவதில் என்ன தவறு என்று அவர்களுக்கு பதிலளித்ததாக கூறியுள்ளார்.

அத்துடன் சச்சின் போலவே கேப்டன்ஷிப் செய்வதற்கு செட்டாக மாட்டார் என்று தெரிவிக்கும் அவர் சுதந்திர பறவையாக விளையாடும் போது தான் 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்தது போல் விராட் கோலியால் சிறப்பாக செயல்பட முடிவதாக கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த உலகிலேயே சச்சின் டெண்டுல்கர் தான் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நான் எப்போதும் நம்புபவன். ஆனால் கேப்டனாக பொறுப்பேற்ற போது அவர் சுமாராக செயல்பட்டார். அதனால் அவர் கேப்டன்ஷிப் பதவிகளை துறந்தார்”

- Advertisement -

“சில சமயங்களில் எனது நண்பர்களுடன் விராட் கோலியை பற்றி பேசும் போதும் இதையே நாங்கள் விவாதிப்போம். அதாவது கேப்டனாக தொலைந்து போன அவருடைய மனம் அதிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக செயல்பட துவங்கியதும் அவரும் சிறப்பாக செயல்பட்டார். அவருடைய மனம் சுதந்திரமாக மாறிய காரணத்தாலேயே 2022 டி20 உலக கோப்பையில் ராஜாங்கம் நடத்தினார். அத்துடன் சேசிங் செய்யும் போது விராட் கோலி அசால்டாக 40 சதங்கள் அடித்துள்ளதை நீங்கள் பார்க்க வேண்டும்”

Akhtar

“இப்படி பேசுவதால் விராட் கோலியை நீங்கள் தொடர்ந்து புகழ்ந்து பேசுகிறீர்கள் என்று என்னிடம் சிலர் தெரிவிக்கிறார்கள். அவர்களிடம் “நான் ஏன் புகழ்ந்து பேசக்கூடாது? ஏனெனில் ஒரு கட்டத்தில் இந்தியா விராட் கோலியின் சதங்களால் நிறைய முக்கிய போட்டிகளை வென்றது” என்று பதிலளிப்பேன்” என கூறினார். அவர் கூறுவது போல இப்போதும் நிறைய மேட்ச் வின்னர்கள் இருந்தாலும் விராட் கோலி சதமடித்தால் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும் என்ற நிலைமை இருக்கிறது.

இதையும் படிங்க: IND vs AUS : இந்த மாதிரி பிட்ச்ல எப்படி சதமடிச்சு பார்முக்கு வரமுடியும்? நட்சத்திர இந்திய வீரரின் விமர்சனங்களுக்கு பாண்டிங் பதிலடி

அந்த வகையில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வரும் அவர் தற்போது நடைபெற்ற வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 2019க்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் சதமடிக்காமல் இருந்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement