- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அதை ஐபிஎல்’க்காக சேமிச்சு வெச்சு.. இந்தியாவுக்கு இப்படி விளையாடுங்க.. பண்ட்க்கு பரூக் என்ஜினீயர் அட்வைஸ்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அந்தத் தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். முதல் போட்டியில் 2 இன்னிங்ஸிலும் சதத்தை அடித்த விக்கெட் கீப்பர் என்ற ஆண்டி ஃபிளவர் உலக சாதனையை அவர் சமன் செய்தார்.

அப்படி பேட்ஸ்மேன்களுக்கு நிகராக அசத்தும் அவர் 3வது போட்டியில் 78 ரன்களில் ரன் அவுட்டானது இந்தியாவின் தோல்விக்கு வித்திட்டது. அப்போட்டியில் லேசான காயத்தை சந்தித்த அவர் விக்கெட் கீப்பிங் செய்யாமல் பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடினார். அதனால் ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் துவங்கும் 4வது போட்டியில் அவர் விளையாடுவாரா என்பது சந்தேகமாக காணப்படுகிறது.

- Advertisement -

ஐபிஎல்ல வெச்சுக்கோங்க:

முன்னதாக ரிசப் பண்ட் மெதுவாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடும் ஸ்டைலைக் கொண்டுள்ளார். அந்த ஸ்டைலை பின்பற்றி தோனியால் செய்ய முடியாத சாதனைகளைப் படைத்துள்ள அவர் சில நேரங்களில் சொதப்பலாகவும் அவுட்டாகி விடுகிறார். குறிப்பாக கடந்த ஆஸ்திரேலிய தொடரில் குருட்டுத்தனமாக அடித்து விக்கெட் இழந்த அவரை ஜாம்பவான் கவாஸ்கர் ஸ்டுப்பிட் என்ற நேரலையில் விமர்சித்தார்.

இந்நிலையில் ரிஷப் பண்ட் ரிஸ்க்கான ஷாட்டுகளை ஐபிஎல் தொடரில் விளையாட சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் பரூக் என்ஜினீயர் கூறியுள்ளார். ஆனால் இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் போது ரிஷப் பண்ட் பொறுப்பாக பேட்டிங் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. ”

- Advertisement -

பொறுப்பும் வேணும்:

“ரிஸ்க்கான ஷாட்டுகளை ஐபிஎல் தொடருக்காக சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒழுக்கம் அவசியம். 3, 4 உட்பட நீங்கள் எங்கே களமிறங்கினாலும் ஒழுக்கமான கிரிக்கெட்டை விளையாடி பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும். ரிஷப் பண்ட் ஒரே போட்டியில் 2 சதங்கள் அடித்தது அற்புதமானது. எனவே தேவைப்பட்டால் ஆர்ச்சர், அட்கின்ஷன் ஆகியோர் அடங்கிய இங்கிலாந்து பவுலிங் துறைக்கு எதிராக அவர் முழு பேட்ஸ்மேனாக கூட விளையாடலாம்”

இதையும் படிங்க: காயமடைந்துள்ள அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப்.. 4 ஆவது டெஸ்டில் ஆடப்போகும் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் யார்? – விவரம் இதோ

“ஆனால் கணிக்க முடியாத ரிஷப் பண்ட் தனது மனதில் வருவதைச் செய்யக்கூடியவர். அதிரடியாக விளையாடுவதைப் பற்றி அவரை சந்தித்த போது நேரடியாகவே சொன்னேன். அதைக்கேட்டு சிரித்த ரிஷப் பண்ட் நிகழ்காலத்தில் வருவதை செய்வதாக சொன்னார். ஆனால் கடந்த போட்டியில் உணவு இடைவெளிக்கு முன் ரன் அவுட்டானதைப் போன்ற முக்கிய தருணங்களில் அவர் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இப்போது ஹெல்மெட் இருப்பதால் அவர் இப்படி விளையாடுகிறார். எங்களுடைய காலத்தில் அப்படி விளையாடியிருந்தால் பல் மீதம் இருந்திருக்காது” என்று கூறினார்.

- Advertisement -