இப்போவாச்சும் சான்ஸ் கொடுங்க! ரசிகர்களே முன்வந்து கோரிக்கை வைக்கும் அளவுக்கு அசத்தும் – தரமான வீரர்

rahul tripathi
Advertisement

மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 15-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 25-வது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்கேற்றன. ப்ர்போர்ன் மைதானத்தில் மிகுந்த பரபரப்புடன் நடைப்பெற்ற அந்த போட்டியில் கொல்கத்தாவை மிஞ்சிய ஐதராபாத் அபாரமாக செயல்பட்டு 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தாவுக்கு தொடக்க வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் 6 (13) ஆரோன் பின்ச் 7 (5) என சொற்ப ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த சுனில் நரேன் 6 (2) ரன்களில் நடையை கட்டியதால் 31/3 என ஆரம்பத்திலேயே அந்த அணி திண்டாடியது.

SRH vs KKR

அந்த வேளையில் காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 28 (25) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்த போதிலும் அவருடன் களமிறங்கிய நிதிஷ் ராணா அதிரடியாக 36 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 54 ரன்கள் விளாசி முக்கிய நேரத்தில் அவுட்டானார். கடைசியில் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அதிரடி காட்டடி வீரர் ஆண்ட்ரே ரசல் சரவெடியாக பேட்டிங் செய்து வெறும் 25 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்ஸர் உட்பட 49* ரன்கள் விளாசி கடைசி வரை அவுட்டாகாமல் சூப்பர் பினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

ஹைதெராபாத் ஹாட்ரிக் வெற்றி:
அதன் காரணமாக 20 ஓவர்களில் 8 விக்கெட் விழுந்த கொல்கத்தா 175/8 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய தமிழக வீரர் நடராஜன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும் உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதை தொடர்ந்து 176 என்ற இலக்கை துரத்திய ஹைதராபாத்துக்கு தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா 3 (10) கேன் வில்லியம்சன் 17 (16) என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

Pooran SRH vs KKR

அதனால் 39/2 என ஆரம்பத்திலேயே சரிவை சந்தித்த ஹைதராபாத்தை அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி சக வீரர் ஐடன் மார்க்ரம் உடன் இணைந்து பட்டாசாக பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்க விட்டு மீட்டெடுத்தார். விக்கெட் விழுந்ததையும் பொருட்படுத்தாமல் மிரட்டலாக பேட்டிங் செய்த இந்த ஜோடியில் வெறும் 37 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் உட்பட 71 ரன்கள் எடுத்திருந்த ராகுல் திரிபாதி முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இருப்பினும் அவருடன் விளையாடிய ஐடன் மார்க்ரம் தொடர்ந்து அதிரடியாக 36 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் உட்பட 68* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அபார பினிஷ் கொடுக்க 17.5 ஓவர்களிலேயே 176/3 ரன்களை எடுத்த ஹைதராபாத் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் தனது முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து 10-வது இடத்தில் திண்டாடிய ஹைதராபாத் அதன்பின் தொடர்ச்சியான 3 வெற்றிகளுடன் ஹாட்ரிக் வெற்றிகளை ருசித்து தற்போது புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அசத்தும் ராகுல் திரிபாதி:
இந்த அற்புதமான வெற்றிக்கு 71 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய ராகுல் திரிபாதி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த போட்டியில் 39/2 என ஆரம்பத்திலேயே ஹைதராபாத் சரிந்ததைப் பற்றி கவலைப்படாத அவர் அதை சரிசெய்ய முதல் பந்தில் இருந்தே அதிரடி பேட்டிங் உத்தியை கையிலெடுத்தார். அதிலும் வெறும் 21 பந்துகளில் பட்டாசாக படித்த அவர் 50 ரன்களை தொட்டு ஐபிஎல் 2022 தொடரில் அதிகமாக அரைசதம் அடித்த 2-வது பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றார்.

- Advertisement -

அத்துடன் ஹைதராபாத் அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்த 2-வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை டேவிட் வார்னருடன் பகிர்ந்து கொண்டார். மேலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்த இந்தியாவுக்காக விளையாடாத 4-வது இந்திய வீரர் என்ற பெருமையும் பெற்றார். மொத்தத்தில் வெறும் 71 (37) ரன்களை விளாசிய அவருக்கு இப்போதாவது வாய்ப்பு கொடுங்கள் என்று இந்திய தேர்வு குழுவினரிடம் ரசிகர்களே கோரிக்கை வைத்துள்ளார்கள்.

- Advertisement -

ஏனெனில் கடந்த 2016 முதல் புனே, ராஜஸ்தான், கொல்கத்தா போன்ற அணிகளில் விளையாடி தற்போது ஹைதராபாத் அணியில் விளையாடும் அவர் இதுவரை மொத்தம் 67 ஐபிஎல் போட்டிகளில் 1556 ரன்களை 139.93 என்ற சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த இந்தியாவிற்காக விளையாடாத வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.

2-வது இடத்தில் மன்னன் வோஹ்ரா 1054 ரன்களுடன் உள்ளார். இப்படி கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் போதிலும் அவரை இந்திய தேர்வு குழு கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.

இதையும் படிங்க : நேரடியா டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் அவரை செலக்ட் பண்ணுங்க ! இளம் வீரருக்கு முன்னாள் பாக் வீரர் ஆதரவு

ஆனால் தற்போது 31 வயதை கடந்துள்ள அவர் சிறப்பாக செயல்படும் இந்த தருணத்தை விட்டால் அவரின் கிரிக்கெட் கேரியர் வீணாகி விடும் எனக்கூறும் இந்திய ரசிகர்கள் அவருக்கு வாய்ப்பு வழங்குவதற்கு இதுவே சரியான தருணம் என்று இந்திய தேர்வு குழுவுக்கு கோரிக்கை வைக்கின்றனர். மேலும் ஒரு சில முன்னாள் வீரர்களும் இந்திய அணியில் அவர் விளையாடுவதற்கு தங்களது ஆதரவை தெரிவிக்கின்றனர்.

Advertisement