நேரடியா டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் அவரை செலக்ட் பண்ணுங்க ! இளம் வீரருக்கு முன்னாள் பாக் வீரர் ஆதரவு

latif
- Advertisement -

மும்பை நகரில் மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமான 2-வது வாரத்தைக் கடந்து பல பரபரப்பான தருணங்களுடன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த தொடரில் தற்போது நடைபெற்று வரும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் மோதி வருகின்றன. இதில் கேன் வில்லியம்சன் தலைமையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தனது முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை பதிவு செய்து முதல் வாரத்தில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடியது.

Pooran SRH vs KKR

- Advertisement -

இருப்பினும் அதன்பின் கொதித்தெழுந்த அந்த அணி நடப்புச் சாம்பியன் சென்னை, குஜராத், கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு எதிரான அடுத்த 3 போட்டிகளில் தொடர் வெற்றிகளை பதிவு செய்து ஹாட்ரிக் வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதல் வாரத்தில் பெற்ற அடுத்தடுத்த தோல்விகளால் துவளாத அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களும் பவுலர்களும் 2-வது வாரத்தில் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுக் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

மிரட்டும் உம்ரான் மாலிக்:
அதிலும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சு துறையில் அனுபவ வீரர் புவனேஷ்வர் குமாருடன் தமிழக யார்க்கர் கிங் நடராஜன் அசத்த அவர்களுக்கு உறுதுணையாக ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் இந்திய வீரர் இம்ரான் மாலிக் கைகோர்த்து உள்ளதால் அந்த அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணி மிரட்டலாக உருவெடுத்துள்ளது. ஏனெனில் பெரும்பாலான பவுலர்கள் 140 கி.மீ வேகப்பந்துகளை வீசுவதற்கே திணறும் நிலையில் இவர் சாதாரணமாகவே 145 கி.மீ வேகப்பந்துகளை அசால்டாக வீசுகிறார். பெரும்பாலான நேரங்களில் தொடர்ச்சியாக 150 கி.மீ வேதத்தை தொடும் இவரின் குறைந்தபட்ச வேகமே 140 கி.மீ என்ற நிலையில் சராசரியாக அனைத்து பந்துகளையும் 145 கி.மீ வேகத்தில் வீசி எதிரணிக்கு அச்சுறுத்தலை கொடுக்கிறார்.

அதிலும் சென்னைக்கு எதிரான போட்டியில் 153.1 கீ.மீ வேகப்பந்தை வீசிய அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக பந்தை வீசிய பவுலராக இந்த இளம் வயதிலேயே சாதனை படைத்துள்ளார். இப்படி வேகத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இவர் வரும் காலங்களில் நிச்சயமாக இந்திய அணியில் விளையாட தகுதியானவர் என்று பல முன்னாள் வீரர்களும் ஜாம்பவான்களும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

யோசனையே வேண்டாம்:
இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் எந்தவித யோசனையுமின்றி உம்ரான் மாலிக்கை தேர்வு செய்யலாம் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷீத் லத்தீப் கூறியுள்ளார். இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் முடிந்த பின் அவர்கள் (இந்தியா) மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு தயாராவார்கள். அதிலும் ஆசிய கோப்பை, உலக கோப்பை என அடுத்தடுத்து முக்கிய தொடர்கள் வருகிறது. எனவே அதில் ஏதாவது ஒரு தொடரில் கண்டிப்பாக அவர்கள் அவரை (உம்ரான் மாலிக்) முயற்சி செய்து பார்க்க வேண்டும். ஏனெனில் உலகக்கோப்பை நடைபெறும் ஆஸ்திரேலியா போன்ற பவுன்ஸ் நிறைந்த ஆடுகளங்களில் இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற ஆசிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை அவர் எளிதாக எடுப்பார்” என கூறினார்.

Umran Malik

உலகின் இதர நாடுகளை காட்டிலும் ஆஸ்திரேலிய மண்ணில் பவுன்ஸ் வேகப்பந்து வீச்சு தான் அதிகமாக எடுபடும். எனவே அதுபோன்ற சூழ்நிலைகளில் கண்டிப்பாக அவரால் சாதிக்க முடியும் என ஆதரவு தெரிவித்துள்ள ரசித் லத்தீப் அதற்கு முன்பாக நடைபெறும் ஆசிய கோப்பை போன்ற தொடர்களில் அவருக்கு வாய்ப்பளித்து அதற்கான முன்னோட்டத்தை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஒருவேளை வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் நிச்சயமாக டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் போன்ற ஆசிய மற்றும் இதர அணி பேட்ஸ்மேன்களுக்கு உம்ரான் மாலிக் கண்டிப்பாக அச்சுறுத்தலை கொடுப்பார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அற்புதமான வேகம்:
“அவர் அங்கு நிச்சயமாக உபயோகமுள்ள பவுலராக இருப்பார். ஏனெனில் அந்த அளவுக்கான வேகங்களை இப்போதெல்லாம் எந்த பேட்ஸ்மேன்களும் எதிர்கொள்வதில்லை. நீங்கள் பார்க்கும் மிட்செல் ஸ்டார்க், பட் கம்மின்ஸ் போன்றவர்கள் கூட சமீப காலங்களில் தங்களது வேகங்களை குறைத்துக் கொண்டனர். ஷாஹீன் அப்ரிடி கூட 145 கி.மீ வேகத்தில் ஸ்விங் மட்டுமே செய்யக்கூடியவர். ஹரிஷ் பந்துகளில் பவுன்சர் கிடையாது” என இது பற்றி ரசித் லதீப் மேலும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : தோனி எப்படி அதை யோசிச்சார்னு இன்னைக்கு வரைக்கும் எனக்கு தெரியல – இஷான் கிஷன் வெளிப்படை

பட் கமின்ஸ், மிட்சேல் ஸ்டார்க் ஏன் தங்கள் நாட்டில் உள்ள ஷாஹீன் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் போன்றவர்கள் கூட இம்ரான் மாலிக்கை போல 150+ கி.மீ வேகத்தில் தொடர்ச்சியக வீசக் கூடியவர்களாக இல்லை என பாராட்டியுள்ள ரசீத் லத்தீப் அந்த அளவு வேகப்பந்துகளை சமீப காலங்களில் எந்த ஒரு உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களும் எதிர் கொள்ளவில்லை என்பதால் நிச்சயமாக உம்ரான் மாலிக் தரமான பேட்ஸ்மேன்களை கூட திணறடிப்பார் என்று தெரிவித்தார்.

Advertisement