தோனி ஆட்டமிழந்து வெளியேறிய போது திட்டி வழியனுப்பிய கோலி – ரசிகர்கள் அதிருப்தி

Virat Kohli MS Dhoni CSK vs RCB
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் தொடரில் மே 4-ஆம் தேதி நடைபெற்ற 49-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை பெங்களூரு எதிர்கொண்டது. புனேவில் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீசுவதாக அறிவித்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கடுமையாக போராடிய பெங்களூரு 173/8 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் டுப்லஸ்ஸிஸ் 38 (22) ரன்களும் நட்சத்திர வீரர் விராட் கோலி 30 (33) ரன்களும் எடுத்து 62 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்து ஆட்டமிழந்தனர்.

ஆனால் அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் 3 (3) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தி நிலையில் நடுவரிசையில் இளம் வீரர்கள் மஹிபால் லோம்ரோர் 42 (27) ரஜத் படிடார் 21 (15) என தேவையான ரன்களை அதிரடியாக எடுத்தனர். இறுதியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் வழக்கம் போல 1 பவுண்டரி 2 சிக்சர்களை பறக்கவிட்டு 26* (17) ரன்கள் குவித்து நல்ல பினிஷிங் செய்தார். சென்னை சார்பில் பந்துவீச்சில் மகேஷ் தீக்சனா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

சிறப்பான பெங்களூரு:
அதன்பின் 2-வது இன்னிங்ஸ்சில் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நல்ல இலக்கை துரத்திய சென்னைக்கு தொடக்க வீரர்கள் ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தபோது ருதுராஜ் 28 (23) ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஆனால் அடுத்து வந்த ராபின் உத்தப்பா 1 (3) அம்பத்தி ராயுடு 10 (8) என சீனியர் வீரர்கள் பொறுப்பின்றி சொற்ப ரன்களில் அவுட்டானதால் பின்னடைவை சந்தித்த சென்னைக்கு அரைசதம் கடந்து காப்பாற்ற போராடிய கான்வேயும் 56 (37) ரன்களில் அவுட்டானது மேலும் பின்னடைவை கொடுத்தது.

அந்த வேளையில் அதிரடியாக விளையாடி காப்பாற்ற முயன்ற மொயின் அலி 34 (27) ரன்களில் கடைசி நேரத்தில் ஆட்டமிழக்க ரவீந்திர ஜடேஜா 3 (5) எம்எஸ் தோனி 2 (3) ஆகியோரும் கடைசி நேரத்தில் கை கொடுக்காமல் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் 20 ஓவர்களில் 160/8 ரன்கள் மட்டுமே எடுத்து சென்னை 13 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வியை சந்தித்தது. பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஹர்ஷல் படேல் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

பலநாள் வெற்றி:
இப்போட்டியில் தோல்வி அடைந்ததன் காரணமாக பங்கேற்ற 10 போட்டிகளில் 7-வது தோல்வியை பதிவு செய்துள்ள நடப்பு சாம்பியன் சென்னை மற்றொரு வெற்றிகரமான அணியாக விளங்கும் மும்பையை தொடர்ந்து லீக் சுற்றுடன் 2-வது அணியாக வெளியேறுவது 100% உறுதியாகியுள்ளது. மறுபுறம் இதுவரை பங்கேற்ற 11 போட்டிகளில் 6-வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு 4-வது இடத்திற்கு முன்னேறியதுடன் எஞ்சிய போட்டிகளில் வென்றால் பிளே-ஆப் சுற்றுக்கு செல்லலாம் என்ற நல்ல நிலைக்கு முன்னேறியுள்ளது.

1. மேலும் இந்த வெற்றியால் தனது கடைசி 3 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்து வந்த பெங்களூரு அந்த ஹாட்ரிக் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து நிம்மதி பெற்றது.

- Advertisement -

2. அதைவிட சென்னைக்கு எதிராக கடைசியாக பங்கேற்ற 4 போட்டிகளிலும் தொடர் தோல்வி அடைந்த பெங்களூரு ஒருவழியாக நேற்றைய போட்டியில் வென்று நிம்மதிப் பெருமூச்சு விட்டது. ஏனெனில் கடைசியாக கடந்த 2020 அக்டோபர் மாதம் தான் துபாயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னையை பெங்களூரு தோற்கடித்தது. அதன்பின் அதே 2020இல் மீண்டும் ஒரு தோல்வி 2021இல் நடந்த 2 போட்டிகளிலும் இந்த வருடம் முதல் முறையாக சந்தித்த போட்டியிலும் தோல்வி அடைந்திருந்தது.

கூச்சலிட்ட கோலி:
இப்படி பலநாள் கழித்து கிடைத்த வெற்றி சென்னையின் கேப்டன் எம்எஸ் தோனி அவுட்டான பின்புதான் சாத்தியமானது என கருதிய பெங்களூருவின் நட்சத்திரம் விராட் கோலி வழக்கம்போல கடும் ஆக்ரோஷத்துடன் கொண்டாடினார். அதிலும் ஒருசில ஹிந்தி கெட்ட வார்த்தையை அந்த சமயத்தில் அவர் பயன்படுத்தியது அப்பட்டமாக பார்த்த ரசிகர்களுக்கு புரிந்தது. ஆனால் எம்எஸ் தோனி போன்ற ஒருவரிடம் இப்படி நடந்து கொள்ளலாமா என்று விராட் கோலியின் ரசிகர்களே அவரின் செயலுக்காக அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி வளர்வதற்கு கேப்டனாக எம்எஸ் தோனி நிறைய ஆதரவை வழங்கியது அவரே பலமுறை ஒப்புக் கொண்டுள்ளார். அதன் காரணமாகவே எப்போதுமே தோனி மீது அவரும் தனி மரியாதையும் பாசத்தையும் வைத்து பலமுறை “நான் தோனியின் ரசிகர்கள்” என்று வெளிக்காட்டியுள்ளார். அப்படிப்பட்ட விராட் கோலியா இப்படி நடந்து கொண்டார் என்று பல ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.

இதையும் படிங்க : அரைசதம் கடந்தும் தடுமாற்றம் குறையல! மோசமான சாதனை படைத்த விராட் கோலி – ரசிகர்கள் ஏமாற்றம்

இருப்பினும் ஆட்டத்தில் அனல் பறக்கும் போது களத்தில் இதெல்லாம் சாதாரணம் என்றும் சில ரசிகர்கள் கூறுகின்றனர். அதற்கேற்றார்போல் போட்டி முடிந்த பின் வழக்கம்போல தோனி – கோலி இருவருமே சிரித்த முகத்துடன் கை கொடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement