- Advertisement -
ஐ.பி.எல்

நல்லவேளை விராட் கோலி டெஸ்டில் ரிட்டையரானதே இந்தியாவுக்கு நல்லது.. ரசிகர்கள் அதிருப்தி.. காரணம் இதோ

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. மே 29ஆம் தேதி நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் பஞ்சாப்பை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அதனால் 9 வருடம் கழித்து ஐபிஎல் ஃபைனலுக்கு சென்றுள்ள ஆர்சிபி இம்முறை கோப்பையை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

சொல்லப்போனால் அந்த அணிக்காக 18 வருடங்களாக விளையாடி வரும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இந்த வருடமும் 600க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடி வருகிறார். இதுவரை 9000 மேற்பட்ட ரன்கள் குவித்துள்ள அவர் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. அது போக சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

- Advertisement -

இந்தியாவுக்கு நல்லது:

எனவே இம்முறை அவருக்காக ஆர்சிபி கோப்பையை வெல்ல வேண்டும் என்பது பலரது விருப்பமாக இருக்கிறது. முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமார் 10,000 ரன்கள் அடித்த அனுபவம் கொண்ட விராட் கோலி கடந்த ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் சதத்தை அடித்தார். ஆனால் அதற்கடுத்த போட்டிகளில் அவர் தொடர்ந்து அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் தம்முடைய விக்கெட்டை தாரை வார்த்தது இந்தியாவுக்கு தோல்வியைக் கொடுத்தது.

2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் முறையாக அந்த பந்துகளைப் பயன்படுத்தி விராட் கோலியை தெறிக்க விட்டார். இருப்பினும் அப்போது முன்னேற்றத்தைச் சந்தித்த விராட் கோலி 2018 தொடரில் அதே பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டு அவருக்கு பதிலடி கொடுத்து அசத்தினார். ஆனால் 2020க்குப்பின் மீண்டும் அந்த பந்துகளில் விராட் கோலி தொடர்ச்சியாக அவுட்டாவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

- Advertisement -

ரசிகர்கள் அதிருப்தி:

குறிப்பாக 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தின் கெய்ல் ஜேமிசன் 2 இன்னிங்சிலும் விராட் கோலியை அவுட்டாக்கினார். அதிலும் குறிப்பாக 2வது இன்னிங்சில் அவர் வீசிய அவுட் சைட் ஆஃப் பந்தில் விக்கெட்டை இழந்த விராட் கோலி இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார். அப்போதிலிருந்தே தடுமாறி வந்த அவரை சச்சின் போல அவுட் சைட் ஆஃப் பந்தை புறக்கணித்து கவர் ட்ரைவ் அடிக்காமல் விளையாடுங்கள் என்று கில்கிறிஸ்ட் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் அறிவுறுத்தினர்.

ஆனால் அதையெல்லாம் கேட்காத விராட் கோலி தொடர்ந்து அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை தொட்டு விக்கெட்டை இழந்ததே 46 பேட்டிங் என்ற சராசரியில் கேரியரை முடிக்க முக்கிய காரணமாக அமைந்தது. அந்த சூழ்நிலையில் பஞ்சாப்புக்கு எதிரானப் போட்டியில் விராட் கோலி மீண்டும் அதே நியூஸிலாந்தின் கெய்ல் ஜமிசன் வீசிய அவுட் சைட் ஆஃப் பந்தில் 12 (12) ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

இதையும் படிங்க: ஸ்ரேயாஸ் ஐயர் அந்த ஈகோவை விட்ருந்தா.. பஞ்சாப் இந்நேரம் ஃபைனலில் இருக்கும்.. டாம் மூடி அதிருப்தி

அதைப் பார்த்த ஒருதரப்பு ரசிகர்கள் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றதே இந்தியாவுக்கு நல்லது என்று அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். ஏனெனில் அடுத்து நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கிட்டத்தட்ட அனைத்து பந்துகளும் அவுட் ஆஃப் ஸ்டம்ப் பகுதிகளில் 130 – 140 கி.மீ வேகத்தில் ஸ்விங் ஆகிக்கொண்டு வரும். அப்படிப்பட்ட பந்துகளை 36 வயதில் சுமாரான ஃபார்மில் விராட் கோலியால் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியுமா? என்பது 99% கேள்வியாகும்.

- Advertisement -