அது வேற வாயா? 7 வருட பழைய பதிவை தோண்டி எடுத்து முகமது கைஃபை விமர்சிக்கும் ரசிகர்கள்

Mohammed Kaif 2
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை என்ற கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக 2023 உலகக் கோப்பை ஃபைனலில் தோல்வியை கொடுத்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமலேயே சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இத்தொடரில் ஆறுதல் வெற்றி கண்டது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

அந்த வகையில் உலகக் கோப்பைகளில் சொதப்பினாலும் இருதரப்பு தொடர்களில் அசத்துவோம் என்பதை மீண்டும் ஒருமுறை இந்தியா நிரூபித்துள்ளது என்றே சொல்லலாம். முன்னதாக நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்று எதிரணிகளை தெறிக்க விட்ட இந்தியா அகமதாபாத் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பேட்டிங்கில் 240 ரன்கள் மட்டுமே எடுத்து ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை தாரை வார்த்தது.

- Advertisement -

வேற வாய்:
அதனால் கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்கள் உடைந்த நிலையில் ஃபைனலில் ஆஸ்திரேலியா சிறந்த அணியாக கோப்பையை வென்றது என்று சொல்வதை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஆதங்கத்துடன் பேசியிருந்தார். மேலும் தொடர்ந்து 10 வெற்றிகளை பெற்ற இந்தியா தான் 2023 உலகக் கோப்பையில் சிறந்த அணியாக திகழ்ந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் அதைப் பார்த்த டேவிட் வார்னர் பேப்பரில் யார் சிறந்த அணியாக இருக்கிறார்கள் என்பதை விட ஃபைனல் நாளில் யார் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதே முக்கியம் என்று அவருக்கு பதிலடி கொடுத்தார். அதற்கு ஃபைனலில் நீங்கள் சிறப்பாக விளையாடினாலும் தொடர் முழுவதும் அசத்திய இந்தியா தான் பேப்பரிலும் களத்திலும் சிறந்த அணியாக செயல்பட்டதாக மீண்டும் முகமது ஃகைப் பதிலடி கொடுத்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் 2016 டி20 உலகக் கோப்பையில் தமக்கு மிகவும் பிடித்த தென்னாப்பிரிக்கா அணி பேப்பரில் வலுவாக இருந்தும் முக்கிய போட்டியில் சொதப்பி வெளியேறிய போது முகமது கைஃப் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு பின்வருமாறு. “டி20 உலகக் கோப்பையில் எனக்கு மிகவும் பிடித்த அணிகளில் ஒன்றான தென்னாப்பிரிக்கா ஆரம்பத்திலேயே வெளியேறுவதை பார்ப்பது ஏமாற்றத்தை கொடுக்கிறது. வெற்றிக்கு நீங்கள் பேப்பரில் எவ்வளவு வலுவாக இருந்தாலும் குறிப்பிட்ட நாளில் சிறப்பாக செயல்படுவது அவசியம்” என்று மே 28, 2016இல் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 2024 டி20 உ.கோ தொடரில் ரிங்குவுக்கு போட்டியா அந்த 2 பிளேயர்ஸ் இருக்காங்க.. எச்சரித்த நெஹ்ரா

அதை பார்க்கும் ரசிகர்கள் அது வேற வாய் இது நாற வாயா என்று அவர் மீது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். அத்துடன் இந்தியா பிடித்த அணி என்பதற்காக ஒரு தலைபட்சமாக ஆஸ்திரேலியா ஃபைனலில் சிறப்பாக செயல்படவில்லை என்று சொன்ன நீங்கள் 2016இல் பதிவிட்ட இந்த ட்விட்டை இப்போது டெலிட் செய்து விடாதீர்கள் என்றும் ரசிகர்கள் கைஃப்க்கு பதிலளித்து வருகிறார்கள்.

Advertisement