- Advertisement -
Categories: ஐ.பி.எல்

ஜெய் ஷா பவரா? மும்பையை சாய்க்க குஜராத் குறுக்கு வழியில் சென்றதை உளறிய கில்.. பிளெமிங் பரிதாபம்

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 29ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் ஒன்பதாவது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் குஜராத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்து தங்களது முதல் வெற்றியைப் பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 63, பட்லர் 39, கேப்டன் கில் 38 ரன்கள் எடுத்த உதவியுடன் 197 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அடுத்ததாக விளையாடிய மும்பை முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவர் 160-6 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 48 ரன்கள் எடுத்த நிலையில் குஜராத்துக்கு அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதனால் மும்பை தங்களது இரண்டாவது தோல்வியை பதிவு செய்து பின்னடைவை சந்தித்தது.

- Advertisement -

உளறிய கில்:

அந்த நிலையில் இந்தப் போட்டியில் கருமண்ணால் செய்யப்பட்ட பிட்ச்சை பயன்படுத்தப் போகிறோம் என்பதைத் தொடர் துவங்குவதற்கு முன்பாகவே முடிவு செய்ததாக குஜராத் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்தார். அந்த முடிவு வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதாக தெரிவித்த அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஒவ்வொரு அணியும் தங்களது பலத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்”

“அது போல நாங்கள் விளையாடும் விதத்திற்கு இது போன்ற பிட்ச் பொருத்தமாக இருக்கும். பேட்டிங், பவுலிங் உட்பட எங்களுடைய மொத்த அணியின் பலமும் செம்மண்ணால் உருவாக்கப்பட்ட பிட்ச் விட கருமண்ணால் உருவாக்கப்பட்ட பிட்ச்க்கு பொருத்தமாக இருக்கிறது. இப்போதெல்லாம் பெரும்பாலும் 240 – 250 ரன்கள் அடிக்கப்படுகிறது. ஆனால் நாங்கள் எங்களுடைய பவுலர்களுக்கு சமமான போட்டியைக் கொடுக்க விரும்புகிறோம்”

- Advertisement -

ஜெய் ஷா பவரா:

“எனவே அனைத்துப் போட்டிகளிலும் 240 – 250 ரன்கள் அடிப்பதை நாங்கள் விரும்பவில்லை. எனவே இந்தப் போட்டியில் கருமண்ணால் உருவாக்கப்பட்ட பிட்ச் பயன்படுத்த வேண்டும் என்பதை முதல் போட்டிக்கு முன்பே முடிவெடுத்தும் அது எங்களுக்கு நன்றாக பொருந்தியது” என்று கூறினார். பொதுவாக எந்த பிட்ச் பயன்படுத்தப்படும் என்பதை போட்டி நடைபெறும் நாளில் அல்லது ஒரு நாள் முன்பாகத் தான் மைதானப் பராமரிப்பாளர் அறிவிப்பார்.

இதையும் படிங்க: ரியான் பராக் 3 ஆம் இடத்தில் விளையாடுவதற்கு இதுதான் காரணம் – பயிற்சியாளர் டிராவிட் பதில்

அப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கே முதல் போட்டிக்கு முன்பே இரண்டாவது போட்டியின் பிட்ச்சை தேர்ந்தெடுத்த குஜராத் குறுக்கு வழியை பின்பற்றியது கில் சொன்னதில் தெளிவாகிறது. மறுபுறம் சேப்பாக்கத்தின் பிட்ச்சை சமீப வருடங்களாகவே சரியாக கணிக்க முடியவில்லை என்று பெங்களூருவிடம் சந்தித்த தோல்விக்கு பின் சென்னை பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்தார். அப்படிப்பட்ட நிலையில் குஜராத் அணிக்கு மட்டும் பிட்ச்சை தேர்ந்தெடுக்கும் உரிமையை ஐசிசி தலைவர் ஜெய் ஷா கொடுத்தாரா என்று ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.

- Advertisement -