ரியான் பராக் 3 ஆம் இடத்தில் விளையாடுவதற்கு இதுதான் காரணம் – பயிற்சியாளர் டிராவிட் பதில்

Dravid and Parag
- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் அண்மையில் நடைபெற்ற முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் போது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த சில வாரங்கள் ஓய்வில் இருந்து வந்தார். அதன்காரணமாக தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் அவர் இம்பேக்ட் வீரராக மட்டுமே விளையாடுவார் என்றும் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

ரியான் பராக் 3 ஆவது இடத்தில் களமிறங்குவது ஏன்? : டிராவிட் விளக்கம்

ஏனெனில் தனக்கு விரலில் ஏற்பட்டுள்ள காயம் முழுவதுமாக குணமடைய சில நாட்கள் பிடிக்கும் என்பதனால் அதுவரை முதல் மூன்று போட்டிகளுக்கு ரியான் பராக் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்துவார் என்றும் அதன் பின்னர் தான் கேப்டன்சி பொறுப்பை மீண்டும் கையில் எடுப்பேன் என்றும் தெரிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ரியான் பராக் செயல்பட்டார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து இன்று கௌகாத்தி மைதானத்தில் நடைபெற இருக்கும் சிஎஸ்கே அணிக்கெதிரான மூன்றாவது போட்டியிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ரியான் பராக் தான் கேப்டன்சி செய்யவுள்ளார். ஆனால் கடந்த ஆண்டு மிகச் சிறப்பான பேட்டிங் பார்மினை வெளிப்படுத்திய ரியான் பராக் இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் முறையே 4 மற்றும் 25 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நான்காம் இடத்தில் சிறப்பாக விளையாடிய அவரை மூன்றாவது வரிசையில் களமிறக்க என்ன காரணம்? என்பது குறித்த தகவலை தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : கடந்த ஆண்டு ரியான் பராக் நான்காவது இடத்தில் சிறப்பாக விளையாடியிருந்தார். அதன் காரணமாகவே தற்போது அவரை மூன்றாவது இடத்திற்கு உயர்த்தியுள்ளோம்.

- Advertisement -

உண்மையை சொல்ல வேண்டுமெனில் ரியான் பராக் எங்களது அணியில் உள்ள ஒரு மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். அவர் எவ்வளவு பந்துகளை சந்தித்து விளையாடுகிறாரோ அந்த அளவிற்கு ரன்கள் வரும். அது அணிக்கும் நல்லது எனவேதான் நான்காவது இடத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்ட அவருக்கு தற்போது மூன்றாவது இடத்தில் வாய்ப்பு வழங்கியுள்ளோம்.

இதையும் படிங்க : விக்னேஷ் புத்தூரை ஏன் சேக்கல? தப்பு நடந்ததே இந்த இடத்தில் தான் – தோல்விக்கு பின் ரசிகர்கள் கொந்தளிப்பு

மூன்றாவது இடத்தில் இறங்கும் போது அவருக்கு கூடுதலாக நேரம் கிடைக்கும் என்பதனால் அந்த முடிவை எடுத்து அவருக்கு டாப் ஆர்டரில் ப்ரமோஷன் வழங்கியுள்ளோம். நிச்சயம் அவரிடம் உள்ள திறமைக்கு எங்களது அணிக்காக அவர் பல போட்டிகளில் வெற்றி பெற்று தருவார் என்றும் ராகுல் டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement