- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அதீத தன்னம்பிக்கையுடன் எடுத்த தேவையற்ற முடிவால் இந்தியாவை தலைகுனிய வைத்த கெளதம் கம்பீர்.. ரசிகர்கள் விளாசல்

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா கையில் வைத்திருந்த வெற்றியை கோட்டை விட்டு சமன் மட்டுமே செய்தது. ஆனால் இரண்டாவது போட்டியில் இன்னும் மோசமாக விளையாடிய இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஆகஸ்ட் 4ஆம் தேதி கொழும்பு நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 240/9 ரன்கள் குவித்தது.

அதைத் துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் அதிரடியாக விளையாடி 64 (44) ரன்கள் குவித்து அட்டகாசமான துவக்கத்தை கொடுத்தார். ஆனால் மறுபுறம் அக்சர் படேல் 44 ரன்கள் எடுத்ததை தவிர்த்து சுப்மன் கில் 35, விராட் கோலி 14, ஸ்ரேயாஸ் ஐயர் 7, ராகுல் 0 என மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அதனால் இந்தியாவை 208 ரன்களுக்கு சுருட்டிய இலங்கை 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

ரசிகர்கள் விளாசல்:
அதனால் இலங்கைக்கு எதிராக கடைசி 12 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி நடை போட்டு வந்த இந்தியா முதல் முறையாக தோல்வியை சந்தித்தது. அத்துடன் 27 வருடங்கள் கழித்து முதல் முறையாக இலங்கைக்கு எதிராக ஒரு இருதரப்பு தொடரை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்ட இந்தியா தலைகுனிவை சந்தித்தது. இதன் காரணமாக இலங்கை ரசிகர்கள் வம்படியாக வந்து இந்திய ரசிகர்களை கிண்டலடித்து வருகின்றனர்.

இந்த தோல்விக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் முக்கிய காரணமாக அமைந்தார் என்றே சொல்லலாம். ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் 4வது இடத்தில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து இந்தியா ஃபைனல் வரை செல்ல உதவினார். அதே போல 5வது இடத்தில் களமிறங்கிய கேஎல் ராகுலும் 400க்கும் மேற்பட்ட ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.

- Advertisement -

குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே 2/3 என இந்தியா திண்டாடியது. அப்போது 5வது இடத்தில் களமிறங்கிய அவர் விராட் கோலியுடன் சேர்ந்து அபாரமாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் வென்றார். ஆனால் இத்தொடரில் புதிய பயிற்சியாளராக வந்ததும் ஸ்ரேயாஸ் ஐயரை முதல் போட்டியில் 5வது இடத்தில் களமிறக்கிய கம்பீர் 2வது போட்டியில் 6வது களமிறக்கினார்.

இதையும் படிங்க: அடுத்த மேட்ச் மட்டும் ஜெயிக்கல.. 27 வருஷம் கட்டி காத்து வந்த மானம் போயிடும் – இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

அதே போல முதல் போட்டியில் 6வது இடத்தில் களமிறங்கிய ராகுல் 2வது போட்டியில் 7வது இடத்தில் களமிறங்கினார். அப்படி அனுபவமிக்க வீரர்களை கீழே களமிறக்கிய கம்பீர் அனுபவமற்ற சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை இலங்கை என்ன செய்து விடப்போகிறது என்று அதீத தன்னம்பிக்கையுடன் குறைத்து மதிப்பிட்டு மேலே களமிறக்கினார். ஆனால் அவருடைய தேவையற்ற சோதனை இந்திய ரசிகர்களுக்கு வேதனையாக அமைந்தது. மொத்தத்தில் நன்கு செட்டிலான மிடில் ஆர்டரை இந்த தொடரில் கம்பீர் கலைத்ததே தோல்விக்கு காரணமானதாக ரசிகர்கள் விளாசி வருகிறார்கள்.

- Advertisement -