அடுத்த மேட்ச் மட்டும் ஜெயிக்கல.. 27 வருஷம் கட்டி காத்து வந்த மானம் போயிடும் – இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

IND-vs-SL
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக நேற்று கொழும்பு நகரில் நடைபெற்ற நடப்பு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய இந்திய அணியானது 208 ரன்களை மட்டுமே குவித்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்திய அணி பெற்ற இந்திய தோல்வி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஏற்கனவே இந்த தொடரின் முதல் போட்டி சமனில் முடிந்த வேளையில் தற்போது இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளதால் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

இந்த தொடரில் இன்னும் கடைசி ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ள வேளையில் இந்திய அணி 27 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு மோசமான நிலையை சந்திக்க இருக்கிறது. அதேபோன்று இந்திய அணியை 1108 நாட்களுக்குப் பின்னர் ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி முதல் முறையாக வீழ்த்தியுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய இலங்கை அணி அதன்பிறகு தற்போது தான் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை வீழ்த்தியுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்துள்ள வேளையில் தற்போது இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் அடுத்ததாக நடைபெற இருக்கும் கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரானது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் அடையும். ஒருவேளை கடைசி போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தால் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் தொடரை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : என்ன நடந்தாலும் என்னோட அந்த அப்ரோச்ச நான் மாத்திக்க மாட்டேன்.. எனக்கு நம்ம டீம் தான் முக்கியம் – ரோஹித் சர்மா

கடந்த 1997-ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி இருந்த இலங்கை அணி அதன் பின்னர் 27 ஆண்டுகளாக இந்திய அணியை வீழ்த்தாமல் இருந்து வந்தது. ஒருவேளை அடுத்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தால் 27 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை அணியிடம் ஒருநாள் தொடரை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement