என்ன நடந்தாலும் என்னோட அந்த அப்ரோச்ச நான் மாத்திக்க மாட்டேன்.. எனக்கு நம்ம டீம் தான் முக்கியம் – ரோஹித் சர்மா

Rohit-Sharma
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த சில ஆண்டுகளாகவே பேட்டிங்கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதன் காரணமாக இந்திய அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்து பல போட்டிகளில் வெற்றியும் கிடைத்துள்ளது. ஒரு சில நேரங்களில் அவரது அதிரடி வீண் போனாலும் மற்ற நேரங்களில் இந்திய அணியே பெரும்பாலும் வெற்றி பெற்று வருகிறது.

அந்த வகையில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேப்டனாக செயல்பட்டு வரும் ரோகித் சர்மா இந்த தொடரிலும் அதிரடியான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக கொழும்பு நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டி “டை”-யாக ரோகித் சர்மாவின் அதிரடியான துவக்கமே காரணம் என்று கூறலாம்.

- Advertisement -

அந்த போட்டியில் குறைந்த பந்துகளை எடுத்துக்கொண்டு அரைசதம் கடந்த ரோகித் சர்மா நேற்று கொழும்பு நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை நோக்கி இந்திய அணி விளையாடும் போது ஆரம்பத்தில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக நேற்றைய போட்டியில் 44 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 64 ரன்கள் குவித்து அசத்தலான துவக்கத்தை அளித்திருந்தார். அவர் நினைத்திருந்தால் இரண்டு போட்டியிலுமே அரைசதம் கடந்த பின்னர் ஒன்று, இரண்டு ரன்களாக தள்ளி சதம் அடித்திருக்க முடியும். ஆனால் அணியின் ரன் குவிப்பு முக்கியம் என்பதனால் அதிரடி காட்டி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தனது இந்த அதிரடியான துவக்கும் குறித்து பேசியிருந்த ரோகித் சர்மா கூறுகையில் : எனக்கு 50, 100 ரன்கள் அதைப்பற்றி எல்லாம் கவலை கிடையாது. அணியின் வெற்றி தான் முக்கியம். எனவே தான் நான் அதிரடியாக விளையாடி வருகிறேன். நான் இந்த போட்டியிலும் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து விட்டேன். அதற்கு காரணம் யாதெனில் என்னுடைய இந்த அதிரடியான பேட்டிங் வழி தான்.

இதையும் படிங்க : 34 வயது வீரரை வைத்து இந்திய அணிக்கு கட்டம் கட்டிய இலங்கை.. ஹசரங்காவிற்கு பதிலாக வந்து அசத்தல் – விவரம் இதோ

இருந்தாலும் நான் இப்படித்தான் தொடர்ந்து பேட்டிங் செய்ய விரும்புகிறேன். இதுபோன்று விளையாடுவதில் நிறைய ரிஸ்க் இருக்கும். ஆனாலும் அதனை கடந்து நான் விளையாடித்தான் ஆக வேண்டும். அணிக்கு அது நல்லது என்பதனால் நான் நிச்சயம் இனியும் அதேபோன்று தான் ஆடுவேன். என்னுடைய இந்த இன்டன்ட் எப்பொழுதும் மாறாது என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement