பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம், புதிய தேர்வுக்குழுவை அறிவித்த பிசிசிஐ, வீழ்ச்சி ஆரம்பமென விளாசும் ரசிகர்கள்

Rohit Sharma Chetan Sharma
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியா 2022ஆம் ஆண்டு புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் சாதாரண இருதரப்பு தொடர்களை வென்றாலும் அழுத்தமான ஆசிய மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய 2 மிகப்பெரிய கிரிக்கெட் தொடர்களில் வழக்கம் போல சொதப்பி எந்த முன்னேற்றத்தையும் சந்திக்கவில்லை என்று நிரூபித்தது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் நட்சத்திர வீரர்கள் சுமாராக செயல்பட்டது அந்த தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்களும் முன்னாள் இந்திய வீரர்களும் காலம் கடந்த வீரர்களை கழற்றி விட்டு புதிய வீரர்களுக்கு வாய்ப்பளித்து அடுத்த டி20 உலக கோப்பைக்கு முன் இளம் அணியை உருவாக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு ஆஸ்கர் விருது நடிப்பை வெளிப்படுத்திய பிசிசிஐ முதலில் சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவை கூண்டோடு நீக்கியது. அத்துடன் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் தரமான தனித்தனியான கேப்டன்களை நியமிப்பதே புதிதாக பொறுப்பேற்கும் தேர்வுக்குழுவின் முதல் வேலையாக இருக்கும் எனவும் பிசிசிஐ அறிவித்தது. அதனால் டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்கும் வேலையை பிசிசிஐ துவங்கி விட்டதாக ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

- Advertisement -

பருத்தி மூட்டை குடோன்:
அது போக ரோகித் சர்மா தலைமையிலான நட்சத்திர சீனியர் வீரர்கள் அடங்கிய முதன்மை அணிக்கு சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலக கோப்பையே கடைசி வாய்ப்பாக இருக்கும் எனவும் செய்திகள் வெளியானது. ஒருவேளை அந்த உலகக்கோப்பையை ரோகித் சர்மா வெல்லத் தவறினால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவரது பதவி பறிக்கப்பட்டு புதிய கேப்டன் நியமிக்கப்படுவார் என்று அடுத்தடுத்த தகவல்கள் வெளியானது. அதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் அடுத்த தேர்வுக்குழு தலைவர் யார் என்று ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் புதிய தேர்வுக்குழு தலைவராக மீண்டும் சேட்டன் சர்மா நியமிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதற்காக 600 விண்ணப்பங்கள் வந்ததாக தெரிவிக்கும் பிசிசிஐ அதை தேர்வுக்குழுவை தேர்வு செய்வதற்காக ஏற்கனவே அமைக்கப்பட்ட அசோக் மல்கோத்ரா, ஜத்தின் பரஞ்சபே, சுலக்சனா நாயக் ஆகியோர் அடங்கிய கமிட்டி ஆராய்ந்து இறுதி முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளது. மேலும் அவர்கள் இன்டர்வியூ எடுத்து சேட்டன் சர்மாவை மீண்டும் தேர்வுக்குழு தலைவராக பரிந்துரை செய்ததாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

- Advertisement -

இருப்பினும் ஏற்கனவே இருந்த உறுப்பினர்களுக்கு பதிலாக எஸ்எஸ் தாஸ், சுப்ரதா பேனர்ஜி, சலீல் அன்கோலா, ஸ்ரீதரன் சரத் ஆகிய மூவரும் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். மொத்தத்தில் தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா அப்படியே இருக்க உறுப்பினர்கள் மட்டுமே மாறியுள்ளார்கள். இதை பார்க்கும் ரசிகர்கள் ஆஸ்கர் விருது உங்களுக்கு தான் வழங்க வேண்டும் என்று பிசிசிஐயை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

மேலும் எங்களைப் பார்த்தால் முட்டாள்களாக தெரிகிறதா? எதற்காக இந்த நாடகம்? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஏனெனில் சேட்டன் சர்மா மீண்டும் தேர்வுக்குழு தலைவராக இருக்க விரும்பினால் எதற்காக அவரை பதவி நீக்கம் செய்திருக்க வேண்டும்? உறுப்பினர்களை மட்டும் நீக்கி விட்டு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்திருக்கலாமே? என ரசிகர்கள் நியாயமான கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.

- Advertisement -

அதன் உச்சகட்டமாக பேசாமல் இதற்கு பருத்தி மூட்டை குடோனில் இருந்திருக்கலாமே என்று கலாய்க்கும் ரசிகர்கள் இந்த அறிவிப்பால் இந்திய கிரிக்கெட் அழிவை நோக்கிச் செல்லுமே தவிர எந்த முன்னேற்றத்தையும் சந்திக்க போவதில்லை என்றும் விமர்சிக்கிறார்கள். ஏனெனில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டன்ஷிப் பதவியில் தொடர விரும்பிய விராட் கோலி வலுக்கட்டாயமாக சேட்டன் தலைமையிலான தேர்வுக்குழு தான் நீக்கியது. அத்துடன் ஆசிய கோப்பையில் தவறான அணியை தேர்வு செய்தது, சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க மறுத்தது போன்ற குளறுபடிகளும் அரங்கேறின.

இதையும் படிங்க: இங்கு வேணாம். அவரை லண்டனுக்கு அனுப்பலாம். ரிஷப் பண்ட் விவகாரத்தில் – பி.சி.சி.ஐ எடுத்துள்ள முடிவு

அதை விட ஏற்கனவே நிலுவையிலிருந்த யோ-யோ டெஸ்ட்டை ரோஹித் சர்மா வந்த பின் மூட்டை கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்த இதே தேர்வுக்குழு அதனால் இந்திய வீரர்கள் ஃபிட்னஸ் இழந்து அடிக்கடி காயத்தை சிந்தித்ததால் மீண்டும் அதை சமீபத்தில் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. எனவே இந்த அனைத்து குளறுபடிகளும் மீண்டும் ஒருமுறை இந்திய கிரிக்கெட்டில் அரங்கேறுவதை விரைவில் பார்க்கலாம்.

Advertisement