இங்கு வேணாம். அவரை லண்டனுக்கு அனுப்பலாம். ரிஷப் பண்ட் விவகாரத்தில் – பி.சி.சி.ஐ எடுத்துள்ள முடிவு

RIshabh Pant Poor Batting
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற அந்த விபத்திற்கு பின்னர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ரிஷப் பண்ட் அதன் பின்னர் மும்பைக்கு மேற்கட்ட சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார்.

- Advertisement -

தற்போது மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்டின் உடல்நிலை குறித்து கண்காணித்து வரும் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ தற்போது மேல் சிகிச்சைக்காக அவரை லண்டனுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

ரிஷப் பண்ட் உடம்பில் எந்தவித எலும்பு முறிவும் ஏற்படவில்லை என்றாலும் கால் மூட்டு பகுதியிலும், கணுக்காலிலும் தசைநார்கள் கிழிந்துள்ளதாக மருத்துவ அறிக்கை வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அவர் முழு உடற்தகுதியை பெற மேலும் காலதாமதம் ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Rishabh Pant

அதேபோன்று அவருக்கு இன்னும் இரண்டு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதால் கிட்டத்தட்ட அவர் குணமடைய 10 மாதங்கள் வரை ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ரிஷப் பண்ட் விமானத்தில் பயணிக்கும் நிலைமைக்கு வந்த பின்னர் அவரை பிசிசிஐ தங்களது நேரடி மேற்பார்வையில் லண்டனுக்கு அனுப்பி அறுவை சிகிச்சை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதன் காரணமாக இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடர், அதற்கு அடுத்து நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் மற்றும் ஆசியக் கோப்பை என பெரும்பாலான தொடர்களை அவர் தவறவிடுவார் என்றும் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் விராட், ரோஹித்தின் கேரியர் முடிந்ததா? ராகுல் டிராவிட் கொடுத்த நேரடியான ரசிகர்கள் விரும்பாத பதில் இதோ

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 50 ஓவர் உலககோப்பை தொடரின் எக்ஸ் பேக்டராக பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் கிட்டத்தட்ட இந்த ஆண்டு முழுவதும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்க கூட வாய்ப்புண்டு.

Advertisement