டி20 கிரிக்கெட்டில் விராட், ரோஹித்தின் கேரியர் முடிந்ததா? ராகுல் டிராவிட் கொடுத்த நேரடியான ரசிகர்கள் விரும்பாத பதில் இதோ

Dravid
Advertisement

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியா 2013க்குப்பின் ஒரு ஐசிசி உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த வருடம் சில அதிரடி மாற்றங்களை செய்யவிருக்கிறது. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் கேப்டன் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் உட்பட நிறைய நட்சத்திர சீனியர் கிரிக்கெட் வீரர்கள் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்கினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் வைத்த கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ அதற்கான வேலைகளை ஹர்திக் பாண்டியா தலைமையில் துவங்கியுள்ளது.

India Virat Kohli Rohit Sharma Bhuvanewar Kumar Dinesh Karthik

இருப்பினும் வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 2023 ஐசிசி 50 ஓவர் உலக கோப்பையில் கடைசி வாய்ப்பாக ரோகித் சர்மா தலைமையில் நட்சத்திர வீரர்கள் அடங்கிய முதன்மை அணி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனாலேயே தற்போது நடைபெற்று வரும் இலங்கை டி20 தொடரில் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் கழற்றி விடப்பட்டு ஹர்டிக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்கள் விளையாடுகிறார்கள். இத்துடன் அடுத்து வரும் தொடர்களிலும் 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

டிராவிட் பதில்:
எனவே டி20 உலக கோப்பைக்கு தயாராகும் முதன்மையான பயணம் 2024 ஜனவரியில் துவங்கும் போது சீனியர் வீரர்களும் மேலும் ஒரு வயதாகியிருக்கும் என்பதால் ரோகித் சர்மா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களின் டி20 கேரியர் முடிந்து விட்டதாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இருதரப்பு தொடர்களில் பணிச்சுமையை நிர்வகிக்கும் வகையில் ஓய்வெடுக்கும் அவர்கள் டி20 உலகக்கோப்பை என்று வரும் போது நிச்சயமாக விளையாடுவார்கள் என்று அந்தந்த நட்சத்திரங்களின் ரசிகர்கள் நம்புகிறார்கள்.

Dravid

இந்நிலையில் அடுத்த டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு இளம் வீரர்களை நோக்கி இந்திய அணி நிர்வாகம் நகர்ந்து விட்டதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அறிவித்துள்ளார். அதனாலேயே 2022 டி20 உலக கோப்பை விளையாடிய அணியிலிருந்து இப்போது வெறும் 3 – 4 வீரர்கள் மட்டும் விளையாடுவதாக தெரிவிக்கும் அவர் ரோகித் சர்மா போன்ற சீனியர்கள் இந்த வருடம் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலக கோப்பையை வெல்வதற்கு தயாராகும் வேலைகளை செய்வார்கள் என்றும் கூறியுள்ளார். இது பற்றி புனேவில் நடைபெற்ற 2வது டி20 போட்டிக்கு பின் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஆம் கடந்த டி20 உலக கோப்பை செமி பைனலில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய அணியிலிருந்து இலங்கைக்கு எதிரான இந்த தொடரில் 3 – 4 வீரர்கள் மட்டுமே விளையாடுகிறார்கள். அந்த வகையில் அடுத்த டி20 உலக கோப்பையை முன்னிட்டு வருங்காலத்தை சற்று நாங்கள் வித்தியாசமான நிலையிலிருந்து பார்க்கிறோம். அதனால் தான் நல்ல தரமான அனுபவம் கொண்ட இந்த இலங்கை அணிக்கு எதிராக சற்று இளம் வீரர்கள் நிறைந்த இளம் அணி எங்களுக்காக விளையாடி வருகிறது. இதனால் மூத்த வீரர்கள் ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு கவனம் செலுத்தும் நல்ல வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. அந்த சமயத்தில் இதுபோன்ற இளம் வீரர்களை நாம் டி20 கிரிக்கெட்டில் முயற்சித்து பார்க்கிறோம்” என்று கூறினார்.

Rohit-and-Kohli

அதாவது டி20 கிரிக்கெட்டில் இளம் வீரர்களை நோக்கி இந்திய அணி நிர்வாகம் நகர்ந்து விட்டது என்று ராகுல் டிராவிட் மறைமுகமாக அறிவித்துள்ளார். ஆனால் இந்த பதில் அந்தந்த நட்சத்திர வீரர்களின் ரசிகர்கள் விரும்பாத ஒன்றாகவே அமைந்துள்ளது.

இதையும் படிங்க: கடிவாளம் போட்ட குதிரை மாதிரி ஓடுறாரு. அந்த இந்திய பவுலரின் பருப்பு இனி வேகாது – சல்மான் பட் கருத்து

குறிப்பாக ரோகித் சர்மா, கேஎல் ராகுல் பரவாயில்லை ஆனால் 2022 டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்து வெற்றிக்கு போராடிய விராட் கோலி என்ன செய்தார்? என்று அவரது ரசிகர்கள் கோபமடைகிறார்கள். இருப்பினும் இதே நட்சத்திர வீரர்களில் வரும் காலங்களில் 2023 ஐபிஎல் தொடரில் அசத்துபவர்கள் நிச்சயம் 2024 டி20 உலக கோப்பையில் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement